September 18, 2021

வாணியம்பாடியில் நடு ரோட்டில் முஸ்லீம் இளைஞர் வெட்டி படுகொலை!- வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரில் வசிப்பவர் வசீம் அக்ரம். வாணியம்பாடியில் சமூகநல ஆர்வலராக இருந்தவர். மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயலாளராகவும் இருந்து வந்தார். அத்துடன் வாணியம்பாடி நகர் இஸ்லாமிய கூட்டு இயக்கத்தில் உறுப்பினராகவும் உள்ளார். நேற்று (அக்டோபர் 10) ஆம் தேதி மாலை 6.50 மணியளவில் வசீம் அக்ரம், தனது குழந்தையுடன் அருகில் உள்ள பள்ளிவாசலில் தொழுகையை முடித்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த மர்ம நபர்கள் சிலர் அவரை சாலையில் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர்.

அந்த கும்பலுக்கு பாதுகாப்பாக ஒரு விலை உயர்ந்த இன்னோவா கார் பின்னாடியே வந்தது. அவர்கள் வெட்டி முடித்தப்பின் அவர்களை ஏற்றிக்கொண்டு அந்தக்கார் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. வெட்டிய 6 பேரும் முகத்தில் மாஸ்க் அணிந்துள்ளனர். இந்த தகவலை கேள்விப்பட்டு வாணியம்பாடி நகர மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். படுகொலை தகவல் காவல்துறைக்கு சொல்லப்பட்டதும் அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொல்லப்பட்டவர் உடல் கைப்பற்றப்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். கொலைக்காரர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கொலை சம்பவத்தை கேள்விப்பட்டு முன்னாள் அமைச்சரான நிலோபர் கபில் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார். தகவலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேலூர் எஸ்பி செல்வகுமார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளார். கொலை செய்த கொலையாளிகளை காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டுமென திருப்பத்தூர்- வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதனால் வாணியம்பாடி பேருந்து நிலை மற்றும் முக்கிய வீதிகளில் உள்ள கடைகள் முடப்பட்டன பதட்டம் காரணமாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தகவலின் பேரில் வேலூர் சரக டி.ஐ.ஜி பாபு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.பின்னர் சிசிடிவி காட்சிகளின் பேரில் 3 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை பிடிக்க உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் அருகே பாலு செட்டி சத்திரம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போது போலீஸார் காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டார்.

அப்போது வண்டலூர் அடுத்த ஓட்டேரி பகுதியை சேர்ந்த பிரசாந்த் என்கின்ற ரவி, வண்டலூர் பகுதியை சேர்ந்த டில்லி குமார் ஆகிய இருவர் கைது செய்து விசாரித்த போது கடந்த 26.7.2021ம் தேதி வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில் உள்ள டீல் இந்தியாஸ் என்பவர் கிடங்கில் 10 பட்டா கத்தி, 8 கிலோ கஞ்சா மற்றும் 3 பேர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனை போலீசாருக்கு காட்டி கொடுத்ததால் கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அவர்கள் வந்த கார் மற்றும் காரில் இருந்த 10 பட்டா கத்திகள் பறிமுதல் செய்து தப்பி ஓடிய கார் ஒட்டுணர் உட்பட 5 பேர்களை போலீசார் தேடி வருகின்றனர். மகன் கண் எதிரிலேயே தந்தை வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.