September 18, 2021

’வாட்ஸ் அப்’ தகவல்களை 90 நாட்கள் பத்திரப்படுத்தி வைக்க வேண்டாம்!- மத்திய அரசு அறிவிப்பு

சமூக ஊடகங்களில் பரிமாறிக் கொள்ளப்படும் தகவல்களை 90 நாட்கள் வரை பத்திரப்படுத்தி வைக்கவேண்டும் என்று விதித்த கட்டுப்பாட்டை நேற்று மத்திய அரசு திரும்பப் பெற்றுக்கொண்டது.
twitter free
இது குறித்து மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நிருபர்களிடம், “நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட வரைவுக் கொள்கை மீது தெரிவிக்கப்பட்ட விமர்சனங்கள், கவலைகள் குறித்து எங்களது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இது ஒரு வரைவு கொள்கைதானே தவிர மத்திய அரசின் கோட்பாடு அல்ல.

எனினும், இந்த புதிய வரைவு கொள்கை மீது தெரிவிக்கப்பட்ட கருத்துகள் தேவையற்ற, தவறான எண்ணத்தை பொதுமக்களிடையே ஏற்படுத்தி விட்டது. எனவே மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சகத்தின் நிபுணர்கள் குழு வெளியிட்ட இந்த வரைவு கொள்கையை திரும்பப் பெறுமாறு அவர்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறேன்.

இது தொடர்பான வரைவு கொள்கை முறைப்படி மேற்கொள்ளப்படும். அதன்பிறகு பொதுமக்களிடம் கருத்து கேட்டு இறுதி முடிவு எடுக்கப்படும்”என்று அவர் கூறினார்.