October 19, 2021

வாசனையை பரப்பி தகவல் சொல்லும் ஸ்மார்ட் போன்

ஸ்மார்ட்போன்கள் அதன் பன்முக வசதிகளுக்காகவும், இணைய இணைப்பு வசதிக்காகவும், கம்ப்யூட்டர் போல செயல்படும் தன்மைக்காகவும், ஸ்டேட்டஸ் அடையாளமாகவும் இன்று உல்கம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.அதிலும் விஞ்ஞான தொழில் நுட்பம் நாளும் வளர்ந்து வருகிற இந்த நாட்களில் ஸ்மார்ட் போன் மனிதர்களுக்கு குறிப்பாக உயர் பொறுப்பில் உள்ளவர்களுக்கு, எப்போதும் பரபரப்பாக இயங்குகிறவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு கம்ப்யூட்டர் செய்யக்கூடிய அத்தனை வேலைகளையெல்லாம் இந்த ஸ்மார்ட் போன் செய்து விடுவதால் இதன் விற்பனை தினந்தோறும் எகிறிக் கொண்டே போகிறது. இந்நிலையில் இப்போது வாசனையை பரப்புகிற ஸ்மார்ட் போன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
smell smartphone
அமெரிக்காவின் மிச்சிகன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் டேவிட் எட்வர்ட்ஸ் என்பவரின் வழிநடத்துதலுடன் பாரீஸ் நகரில் உள்ள ஒரு நிறுவனம்தான் மணம் பரப்புகிற இந்த ஸ்மார்ட் போனை கண்டுபிடித்துள்ளது.ஸ்டார்ட் போனின் சிப்பில் வாசனைப் பொருள் இணைக்கப்பட்டுவிடும்.

இந்த ஸ்மார்ட் போனிலிருந்து இ-மெயில், டுவிட்டர் பதிவு, தகவல்களை அனுப்புகிறபோது, அதைப் பெறுகிறவர் வாசனையை கிட்டத்தட்ட 20 வினாடிகள் நுகர முடியும்.முதலில் மெழுகில் வாசனையை ஈர்க்க வைத்து, அதை மறுவடிவமைப்பு செய்து, சிப்பில் பொருத்துவார்களாம்.

Message scent: oPhone sends smells as a text or email
************************************************************************
The smartphone has certainly ushered in a state of hyper-connectivity, where the sharing of information over long distances, even to the other side of the world, is a simple tweet, email or Snapchat away. While these platforms offer up plenty of content for our eyes and ears, some feel that our noses are missing out on all the fun and have developed the oPhone, a Bluetooth-enabled odor emitting device designed to enable users to send smells to one another as a text or email.