June 24, 2021

வறண்டு போன நீர் நிலைகளின் எண்ணிக்கை எகிறுது! – இதனால் கால் நடை தீவனத்திற்கும் தட்டுப்படு!

இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 33 கோடி மக்கள், வறட்சியினால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று, மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது. நாட்டில் வறட்சியினால் 33 கோடி மக்கள் குடிநீர் பற்றாக்குறை மற்றும் விவசாய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர் என்றும், வறட்சியினால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசின் பேரிடர் நிதியில் இருந்து நிதி வழங்கப்பட்டு வருகிறது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
drot apr 23


சுப்ரீம் கோர்ட்டில் அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில், 254 மாவட்டங்களில் 2 இலட்சத்து 55 ஆயிரம் கிராமங்கள் வறட்சியினால் பாதிக்கப்பட்டு உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும், பீகார் மற்றும் அரியானா மாநிலங்களில், மழை பற்றாக்குறை இருந்தபோதிலும் வறட்சி நிலையானது அறிவிக்கப்படவில்லை. மத்திய அரசு அளித்துள்ள தகவலில், வறட்சியினால் பாதிக்கப்பட்ட 10 மாநிலங்களில் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மராட்டியம், ஜார்கண்ட் மற்றும் கர்நாடகா, முதல் 5 இடங்களை பிடித்துள்ளன.மேலும், ஐதராபாத்தில் 30 ஆண்டுகளுக்கு பின்னர், முதல்முறையாக குடிநீர் நெருக்கடி அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் உள்ள முக்கியமான 91 நீர்தேக்கங்களில் நீர் கையிறுப்பின் அளவு வேகமாக குறைந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த நீர்நிலைகளில் 22 சதவீதம் தண்ணீரின் அளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய நீர் வளத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஏப்ரல் 21ம் தேதி நிலவரப்படி நாட்டில் உள்ள நீர்நிலைகளில் 34.082 பில்லியன் க்யூபிக் மீட்டர் அளவிற்கே நீர் இருப்பு உள்ளது. 157.799 பில்லியன் க்யூபிக் மீட்டர் அளவு நீர் இருக்க வேண்டிய இடத்தில் தற்போது 34.082 பில்லியன் க்யூபிக் மீட்டர் அளவு தண்ணீர் மட்டுமே உள்ளது. இது கடந்த ஆண்டு இருந்ததை விட 35 சதவீதம் குறைவு.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இமாச்சல பிரதேசம், தெலுங்கானா, பஞ்சாப், ஒடிசா, ராஜஸ்தான், ஜார்கண்ட், குஜராத், மகாராஷ்டிரா, உத்திர பிரதேசம், உத்திரகாண்ட், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள முக்கிய நீர்ஆதாரங்களில் மிக குறைந்த அளவே நீர் இருப்பு உள்ளன. ஆந்திரா மற்றும் திரிபுராவில் உள்ள நீர்ஆதாரங்களில் மட்டுமே பரவாயில்லை என சொல்லும் அளவிற்கு நீர்இருப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள முக்கிய நீர்ஆதாரங்கள் வேகமாக வறண்டு வருவதால் இந்த கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிக்க வாய்ப்புள்ளது. பல மாநிலங்களில் ஏற்கனவே கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் பொது மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இதனிடையே கடும் கோடை வெயிலால், நாடெங்கும் தீவனப்பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இதனால், கால்நடைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது. விவசாயத்தை ஆதாரமாகக்கொண்ட இந்தியாவில் விவசாயிகளின் துணைத்தொழிலாக இருப்பது ஆடு, மாடு வளர்ப்பு தான். விவசாயம் நஷ்டமடையும் சூழலில், இந்த தொழில் தான் கை தூக்கி விடுகிறது. பால் விற்பனையில் கிடைக்கும் வருமானம் தான், பெரும்பாலான விவசாயிகளின் குழந்தைகளுக்கு கல்வி கட்டணம் செலுத்த ஆதாரமாக உள்ளது.

அந்த தொழிலுக்கும், தற்போது நிலவும் கடும் வெயிலும் வறட்சியும் சவாலாக மாறியுள்ளது. கடந்த இரு மாதங்களாக தகிக்கும் அதீத வெயில், கால்நடைகளுக்கான தீவன ஆதாரங்களை அழித்து வருகிறது. தென்னந்தோப்புகளுக்குள் வளரும் களைச்செடிகள் தான் முக்கிய பசுந்தீவனமாக இருக்கும் நிலையில், அவை அனைத்தும் கருகிப்போயுள்ளன