September 23, 2021

வருமான வரி தாக்கல் செய்ய திங்கட்கிழமை வரை அவகாசம்!

ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டுபவர்கள், தங்களது வருமான வரிக் கணக்கை இணையம் வழியாக தாக்கல் செய்ய வேண்டும் என்பது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.நேரடி வரிகள் மூலம் மொத்தம் ரூ.7.98 லட்சம் கோடி வசூலிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், நாடு முழுவதும் சுமார் 4 கோடி பேர் மட்டும் வருமான வரி செலுத்தும் நிலையில் சம்பளதாரர்கள், ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்டோர் தங்களது வருமான வரிக் கணக்கை மின்னணு முறையில் தாக்கல் செய்வதற்கான (இ-ஃபைலிங்) காலக்கெடு வரும் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
i t fil sep
இதுதொடர்பாக, மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “நாடு முழுவதும் சம்பளதாரர்கள், ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்டோர், கடந்த நிதியாண்டுக்கான (2014-15) வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வ தற்கான காலக்கெடு, ஏற்கெனவே ஜூலை 31-ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீடிக்கப் பட்டது. இந்த நிலையில், கடைசி நாளான திங்கள்கிழமை (ஆக.31), சில தொழில்நுட்பக் காரணங்களால், மின்னணு முறையில் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ததில் சிரமங்களைச் சந்தித்ததாக, நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த வருமான வரி செலுத்துவோர் தெரிவித்தனர். அவர்களது கோரிக்கைகளைக் கவனத்தில் கொண்டு, மின்னணு முறையில் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு, வரும் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது “ என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

.முன்னதாக, குஜராத்தில் இடஒதுக்கீடு கோரி படேல் சமூகத்தினர் அண்மையில் மாநில தழுவிய அளவில் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதனைக் கருத்தில் கொண்டு, அந்த மாநிலத்தில் மட்டும் பொதுமக்கள் தங்களது வருமான வரிக் கணக்கை நேரடியாகத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.