September 25, 2021

வரி செலுத்துவோர் குறை தீர்க்க புதன் கிழமை தோறும் முகாம்

மத்தியில், பா.ஜ., ஆட்சி அமைந்ததில் இருந்து, ‘தூய்மை இந்தியா, மேக் இன் இந்தியா’ உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, அரசு அலுவலகங்களில் சிறப்பாகவும், விரைவாகவும் பணிகள் நடப்பதற்காக, நல்லாட்சி திட்டத்தையும் பிரதமர் மோடி அறிவித்தார். இந்நிலையில், வருமான வரித்துறையின் தலைமைப் பிரிவான, நேரடி வரித்துறை வாரியம், நாடு முழுவதும் உள்ள வருமான வரித்துறை அலுவலகங்களுக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
it logo
அதில்,

* ஒவ்வொரு புதன் கிழமையும், வரி செலுத்துவோரின் குறைகளைக் கேட்டு, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க, சிறப்பு கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.

* ஒவ்வொரு வாரமும், புதன் கிழமை, காலை, 10:00 மணியிலிருந்து, பகல், 1:00 மணி வரை இதற்காக நேரம் ஒதுக்க வேண்டும்.

* குறை தீர்ப்பு நாளன்று, வருமான வரித் துறை அலுவலகங்களின் உயர் அதிகாரிகள், வரி செலுத்துவோரின் குறைகளைத் தீர்ப்பதற்கு நேரத்தைச் செலவிட வேண்டுமே தவிர, வேறு எந்த பணிகளுக்கும் நேரம் ஒதுக்கக் கூடாது.