September 25, 2021

வரி ஏய்ப்பாளர்கள் பற்றி ரகசிய தகவகா? ரூ.15 லட்சம் சன்மானம்!

வரி ஏய்ப்பை தடுக்கவும், வரி ஏய்ப்பு தொடர்பான ரகசிய தகவல்களை அளிக்கும் நபர்களை ஊக்குவிக்கவும் புதிய ஏற்பாடு செய்துள்ள இந்திய வருமான வரித்துறை அலுவலகம் வருமான வரி ஏய்ப்பாளர்கள் பற்றி ரகசிய தகவல் அளிப்பவர்களுக்கு 15 லட்சம் ரூபாய்வரை சன்மானமாக வழங்க முடிவு செய்துள்ளது.
i t fill
தாமாகவே வந்து வருமான வரி தொடர்பான கணக்கை தாக்கல் செய்வதிலோ, சேவை வரி பிடித்தத்தை உரிய முறையில் செலுத்துவதிலோ தில்லுமுல்லு செய்யும் நபர்களைப் பற்றி உரிய ஆவண ஆதாரத்துடன் தகவல் அளிக்கும் தனிநபர்களுக்கு, வரி ஏய்ப்பாளர்களிடம் இருந்து பெறப்படும் அபராதம் உள்ளிட்ட தொகையில் பத்து சதவீதம், அல்லது அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் சண்மானமாக வழங்கப்படும்.

இப்படி, தகவல் அளிப்பவர்களின் பெயர், ஊர் போன்ற விபரங்கள் வெகு ரகசியமாக பாதுகாக்கப்படும். இதுதொடர்பான புதிய சுற்றறிக்கை நாட்டில் உள்ள அனைத்து வருமான வரித்துறை அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தற்போதையை நிலவரப்படி, இதைப்போல் வரி ஏய்ப்பு செய்த 50 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடம் இருந்து இதுவரை வாராத்தொகையாக சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவையில் உள்ளதாக வருமான வரித்துறை உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.