வரதட்சணை கொடுமையால் ஒரு மணி நேரத்திற்கு ஒரு பெண் பலி:இந்திய அதிர்ச்சி!
இந்தியாவில் வரதட்சணை கொடுமையால் இறக்கும் பெண்களின் எண்ணிக்கை 2007ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை அதிகரித்துள்ளது. நாட்டில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு பெண் வரதட்சணை கொடுமையால் உயிர் இழக்கிறார்.தேசிய குற்ற ஆவணங்கள் அமைப்பு தெரிவித்துள்ள இத்தகவல் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் தேசிய குற்ற ஆவண காப்பகம் (என்.சி.ஆர்.பி.) வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த (2012) ஆண்டில் மட்டும் 8 ஆயிரத்து 233 வரதட்சணை சார்ந்த இறப்புகள் நிகழ்ந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் 2007-லிருந்து 2011-க்கு இடைப்பட்ட 5 ஆண்டுகளில் வரதட்சணை கொடுமை தொடர்பான இறப்புகள் பன்மடங்கு அதிகரித்து விட்டன. அதே வேளையில், குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும் விகிதமும் 35.8-லிருந்து 32 ஆக குறைந்துள்ளது என தெரிய வருகிறது.
முன்னெல்லாம் கீழ்தட்டு மற்றும் நடுத்தர குடும்பங்களில் தான் இந்த கொடுமைகள் நடக்கின்றன என்ற பாகுபாடுகளை கடந்து தற்போது மேல்தட்டு மக்களிடமும் வரதட்சணை பேராசை பெருமளவுக்கு குடிகொண்டுள்ளது தான் வரதட்சணை தொடர்பான இறப்புகள் ஒரு மணி நேரத்திற்கு ஒன்று என்ற உச்சகட்டத்தை அடைந்துள்ளதற்கு காரணம் என கூறப்படுகிறது.
1983ம் ஆண்டு திருத்தி இயற்றப்பட்ட வரதட்சணை தடுப்பு சட்டத்தில் உள்ள ஓட்டைகளும் வரதட்சணை இறப்புகளில் பிடிபடும் குற்றவாளிகள் எளிதாக ஜாமினில் வரவும், தண்டனையில் இருந்து தப்பி விடவும் காரணமாக உள்ளது.இதனால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான வழக்குகளை விரைவாக விசாரித்து, உரிய தண்டனையை பெற்று தருவதில் தொடர்ந்து முட்டுக்கட்டைகள் நீடித்துக் கொண்டே வருகின்றன என சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர்.
Dowry deaths: One woman dies every hour in India
******************************************************************
One woman dies every hour due to dowry related reasons on an average in the country, which has seen a steady rise in such cases between 2007 and 2011, according to official data. National Crime Records Bureau (NCRB) figures state that 8,233 dowry deaths were reported in 2012 from various states. The statistics work out to one death per hour. The number of deaths under this category of crime against women were 8,618 in 2011 but the overall conviction rate was 35.8 per cent, slightly above the 32 per cent conviction rate recorded in the latest data for 2012.