October 25, 2021

வயாகரா காதை மட்டுமல்ல கண்ணையும் பாதிக்கும்:எச்சரிக்கை!

ஆணின் தாம்பத்ய குறைபாட்டை நீக்க கண்டுபிடிக்கப்பட்ட மருந்து வயாகரா.அறிமுகமானபோது உலகம் முழுவதும் அமோக ஆதரவு பெற்றது. அதை தொடர்ந்து பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் பற்றி அமெரிக்காவின் அலபமா பல்கலைக் கழக பேராசிரியர் குழு ஆய்வு நடத்தியது. அதன் முடிவுகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே லைவ் சயின்ஸ் இதழில் வெளியாகியுள்ளன. அதில் ”வயாகரா உட்பட ஆணின் தாம்பத்ய குறைபாட்டை நீக்கும் மாத்திரைகளில் பாஸ்போடியஸ்டெராஸ் என்ற மருந்து உள்ளது. அதை தொடர்ந்து பயன்படுத்தினால், மற்றவர்களைவிட காது கேட்கும் திறனை இழக்கும் ஆபத்து 2 மடங்கு அதிகம் உள்ளது.வயாகரா, சியலிஸ், லிவிட்ரா ஆகிய மாத்திரைகளில் பாஸ்போடியஸ்டெராஸ் உள்ளது. இதை பிடிஇ 5ஐ என்று மருந்து நிர்வாகத் துறை கூறுகிறது. திடீர் காது கேளாமையை இது ஏற்படுத்தக்கூடியது என்பதால், 2007ம் ஆண்டே அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை எச்சரிக்கை வெளியிட்டது.” என்ரு தெரிவித்திருந்த நிலையில் மாத்திரை பயன்படுத்துபவர்களின் கண் பார்வை பாதிக்கப்படும். ஒரு சிலருக்கு கண் பார்வை பறிபோகும் அபாயமும் உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.
vioya eye
ஆஸ்திரேலியா நியூசவுத் வேல்ஸ் பல்லைக்கழக நிபுணர்கள் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதில், வயாகரா மாத்திரையில் ‘சில்டெனாபில்’ என்ற மூலக்கூறு உள்ளது. அதில் உள்ள என்னசம் கண்விழித்திரையில் இருந்து மூளைக்கு செல்லும் ஒளி சிக்னல்களை தடுத்து நிறுத்தும் சக்தி கொண்டது.

அதுவே, கண்பார்வை பாதிப்புக்கும் பார்வை பறிபோவதற்கு காரணமாக உள்ளது. இந்த சில்டெனாபில் மூலக்கூறு கண்விழித்திரையில் நிரந்தரமாக தங்கி செல்களை கொன்று பார்வையை படிப்படியாக குறைத்து பின்னர் முழுவதும் பறிபோக செய்யும்.இந்த சோதனை நல்ல உடல் நலத்துடன் இருந்த சுண்டெலிகளில் நடத்தப்பட்டது. வயாகரா மாத்திரை கொடுத்த 2 நாளிலேயே அவற்றின் கண்பார்வையில் பாதிப்பு ஏற்பட்டதை நிபுணர்கள் கண்டுபிடித்தனர்.