September 27, 2021

வயாகரா ஐஸ்கிரீம் – இங்கிலாந்தில் கலக்கல்!

வாடிக்கையாளர்களை கவருவதற்காக, இங்கிலாந்து நாட்டு நிறுவனம் ஒன்று வயாகரா ஐஸ் கீரிம்களை தயாரிக்கின்றன.இது குறித்து கேட்ட போது முழுக்க தனது பணக்கார வாடிக்கையாளருக்குமான இந்த வியாபார தொடர்பைப் பற்றி அதிகம் விவரிக்க மறுத்து விட்ட அதன் ஓனர் ஹார்ரி பிரான்சிஸ் தற்போது ஒரு கரண்டி (ஸ்கூப்) அரவுசல் ஐஸ் கிரீமை 33 டாலர்களுக்கு (இந்திய மதிப்புக்கு சுமார் இரண்டாயிரம் ரூபாய்) விற்பனை செய்கிறோம் என்பதை மட்டும் இப்போதைக்கு தெரிவித்துள்ளார்
viagra.iceacream.
இங்கிலாந்தை சேர்ந்த ஒரு செல்வந்தர், அந்நாட்டின் பிரபல உணவு நிபுணரான சார்லி ஹார்ரி பிரான்சிஸ் என்பவரை தொடர்பு கொண்டார். ’லிக் மி- ஐ ஆம் டெலிஷியஸ்’ என்ற பெயரில் இங்கிலாந்தில் மிகவும் பிரபலமான இருட்டில் கூட ஒளிரக்கூடிய ஐஸ் கிரீம் வகைகளை அறிமுகம் செய்த இவர், தனது நிரந்தர வாடிக்கையாளரின் வேண்டுகோளை ஏற்று, பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ‘வயாகரா ஐஸ் கிரீமை’ அவருக்கு வழங்கி அசத்தியுள்ளார்.

டாக்டர்கள் பரிந்துரைக்கும் வயாகரா மாத்திரையின் முதல் அளவான 25 மில்லி கிராம் மருந்துடன், சாம்பெய்ன் சுவையுடன், நீல நிற ஐஸ் கிரீம் கலவை சேர்த்து தயாரிக்கப்பட்ட இந்த ஐஸ் கிரீமுக்கு அவர், ‘அரவுசல்’ (எழுச்சி) என்று பெயரிட்டுள்ளார்.