September 25, 2021

வயதோ 60 வாங்கிய விருதுகளோ 74:நீச்சல் போட்டிகளில் அசத்தும மும்பை ஸ்வப்னா வாணி

மும்பையில் இன்று நடக்கவிருக்கும் கடலில் 6 கி.மீ., நீச்சல் போட்டியில் 60 வயதான ஸ்வப்னா வாணி உட்பட பலரும் பங்கேற்கின்றனர். இத்தனைக்கும் சுமார் 35 வயதிலிருந்துதான் இது போன்ற நீச்சல் போட்டிகளில் பங்கேற்கும் இந்த ஸ்வபனா வாணி இது வரை 74 விருதுகளைப் பெற்று அசர வைத்துள்ளார்.
nov 23 - lady 60-year-old-Mumb
30 வயது தொடங்கி 40 வயது வரை பெண்களுக்கு நடுத்தர வயது. இந்த பருவத்தில் உடலில் பலவிதமான மாறுதல்களும் ஏற்படு கின்றன. உடற்கட்டு, இளமைத் தோற்றம், சுறுசுறுப்பு ஆகியவை பாதிக்கபடுகின்றன. தலைமுடி நரைப்பது, முகத்தில் சுருக்கம் விழுவது போன்ற அடையாளங்களும் தோன்றுகின்றன. உடலில் அடிக்கடி சின்ன சின்ன நோய்களும் ஏற்படுகின்றன.இதனால் பாலா பெண்கள் ‘ஹும்.வாழ்க்கையே அவ்வளவு தான்’ என நினைத்து சோம்பிப போய் விடுகையில் இப்போதும் 60 வயதில் நாட்டில் எங்கு நீச்சல் போட்டி நடந்தாலும் அதில் ஆர்வமாக பங்கேற்று விருதுகளைக் குவித்து வருகிறார் ஸ்வபனா வாணி.

இவர் மும்பையில் இன்று நடைபெற உள்ள கடல் நீச்சல் போட்டியிலும் பங்கேற்கிறார். கடலில் 6 கி.மீ., நீச்சல் அடிக்க வேண்டிய இந்த போட்டியில் 16 வயது முதல் பல வயதினரும் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிலும் ‘எப்படியும் இம்முறையும் விருதை வென்றே தீருவேன்’ என உறுதி பட கூறுகிறார்.இத்தனைக்கும் ஸ்வப்னா வாணி சிறுவயதில் இருந்தே நீச்சல் அடிக்கவில்லையாம். அவருக்கு 35 வயதாக இருக்கும் போது அவரின் இரு மகன்களுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்கும் கேம்பிற்காக சில நீச்சல் குளங்களுக்கு கூட்டிச் சென்றவர் அங்கேயே தானும் நீச்சல் பயிற்சி பெற்று சில ஆண்டுகளில் இவரும் நீச்சல்
வீராங்கனையாக மாறிவிட்டாராம்.அதே சமயம் அவரின் மகன்கள் இந்த நீச்சலை மறந்து வேறு வேலைகளில் மூஜகி விட்ட நிலையில் இவரோ இன்னும் தண்ணீரும் நீச்சலுமாக இருக்கிறார். இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளில் நடக்கும் நீச்சல் போட்டிகளிலும் பங்கேற்று அசத்துகிறார் ஸவ்பனா வாணி.

60-year old Mumbai woman to compete in 2-km long open sea swimming contest
*********************************************************************
A 1953 born, 60 year old Mumbai swimmer Swapna Wani is all set to compete in a prestigious 2-km long open sea swimming competition organized by Indian Navy in Mumbai today.