September 24, 2021

வந்துட்டுதய்யா.. பருவ மழை வந்துட்டுதய்யா!

கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக எதிர்பார்க்கப்பட்ட தென்மேற்கு பருவமழை இன்று ஒரு வழியாக பெய்யத் தொடங்கி விட்டது.
weather-june 5
இது குறித்து இந்தியா வானிலை ஆய்வு மையம்,”வழக்கமாக ஜூன் 1-ல் தொடங்க வேண்டிய தென் மேற்கு பருவ மழை 4 நாட்கள் தாமதமாக இன்று தொடங்கியுள்ளது. தெற்கு மற்றும் மத்திய அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளிலும், தென் கர்நாடகாவின் சில உள் மாவட்டங்கள் , தமிழகத்தின் சில உள்மாவட்டங்களிலும் இந்த மழையை எதிர்பார்க்கலாம்.

கர்நாடகா, தமிழ்நாடு ராயலசீமா, கடலோர ஆந்திரபிரதேஷ் மற்றும் வடகிழக்கு இந்தியாவின் ஒரு சில பகுதிகளிலும் அடுத்த 48 மணிநேரத்தில் மழைபெய்வதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாகவும் வனிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவ மழை இந்த ஆண்டு மே 30 ஆம் தேதி பெய்ய தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் முதலில் கணித்து இருந்தது. இருப்பினும் பின்னர், நடப்பு ஆண்டு பருவ மழை குறைவாகவே பெய்யும் என்று தெரிவித்து

மேலும் பருவமழை குறித்த முந்தைய கணிப்பு இந்த ஆண்டு 93 சதவீதம் அளவுக்கு மழை பெய்யும் என்று கூறியிருந்தது. பலவிதமான காரணங்களினால் இந்தியப் பொருளாதாரத்தில் விவசாயத்தின் பங்களிப்பு 13 சதவீதம் என்ற அளவுக்கு குறைந்துவிட்டது.இதனிடையே பருவமழையும் குறைந்தால், உணவுப் பொருட்களின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு விலைவாசிகள் உயரும் எனும் அச்சத்தால் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.