October 19, 2021

வணக்கம் சென்னை – சினிமா விமர்சனம்! By இரா. ரவிஷங்கர்.

தமிழ் சினிமாவிற்கு மீண்டும் ஒரு இளம்பெண் இயக்குநர்! நல்வரவு கிருத்திகா உதயநிதி.!!உண்மையில், தயாரிப்பாளரான உதயநிதி, இயக்குநராக ஆசைப்பட்டிருக்கும் தனது மனைவி கிருத்திகாவிற்கு கொடுத்திருக்கும் காஸ்ட்லியான, கலர்ஃபுல்லான கிஃப்ட்டின் பெயர்தான் ‘வணக்கம் சென்னை’.

அந்த கிஃப்ட்டை பத்திரமாக பாதுக்காக்க வேண்டும் என்ற ஒரே ஐடியாவோடு, தமிழ் சினிமாவிற்கும் ரசிகபெருமக்களுக்கும் அதிகம் பழக்கப்பட்ட காதல், காதலன், காதலி, மோதல், ஊடல், கூடலை கையிலெடுத்து இருக்கிறார் அறிமுக இயக்குநர்.
13 - vanakkam chennai
ஒரு தில்லாலங்கடியான ப்ரோக்கரால் ஒரே வீட்டில் வசிக்கவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிற ஹீரோ ஹீரோயின், பிறகு அதே வீட்டில் ’அஃபிஷியலாக’ குடும்பம் நடந்த முடிந்ததா இல்லையா என்பதுதான் ‘வணக்கம் சென்னை’யின் ஒன் லைன்.

ப்ரோக்கர் நாராயணனாக வரும் சந்தானம், ஒரே வீட்டை 420 பண்ணி இருவருக்கு வாடகைக்கு விடுவதும், அது ஹீரோ ஹீரோயினாக இருப்பதும் கொஞ்சம் புதுசு. அதேபோல் வீட்டில் ஆணி அடிக்கக்கூடாது, ஃபேன்ல தூக்குப் போட்டு தொங்கக்கூடாது, மாடியிலிருந்து குதித்து தற்கொலை பண்ணிக்கக்கூடாது என்று போடும் சென்னையின் லேட்டஸ்ட் பஞ்சாயத்து கண்டிஷன்களும் புதுசு.

சிவாவும், ப்ரியா ஆனந்தும் வீட்டுக்காக சண்டையிடும் போது, ‘பாத்ரூமுக்கு ரெண்டு கதவு இருக்கு அது கூட தெரியல. இது உன் வீடா?’ என்று ப்ரியாவை சிவா கலாய்ப்பது, சிவா மொபைல் நம்பரை ‘டெவில்’ என்ற பெயரிலும், ப்ரியா மொபைல் நம்பரை ‘பிசாசு’ என்றும் சிவா நோட் பண்ணுவது, பாத்ரூம்மை டைம் டேபிள் போட்டு யூஸ் பண்ணுவது, சந்தானத்தை கங்கணம் கட்டிகொண்டு தேடும் சிவா, பஸ் ஸ்டாண்டில் சந்தானத்தைப் பார்த்த பிறகும் கண்டுகொள்ளாமல் போவது, பிறகு சந்தானத்தின் லைசென்ஸை வைத்து அவரது வீட்டைக் கண்டுபிடித்து போய் சண்டைப் போடுவது என சின்ன சின்ன குறும்புத்தனமான சமாச்சாரங்கள் ரசிக்க வைக்கின்றன.

படத்தின் பலம் எடிட்டிங்கும், ஒளிப்பதிவும். அறிமுக இயக்குநராக இருந்தாலும், படத்தின் மேக்கிங்கில் குறையில்லாமல் கையாண்டு இருக்கிறார் கிருத்திகா. வாழ்த்துகள்!

ஆனால்ல்ல்ல்ல்ல்ல்……..

ஹீரோ ஹீரோயின் மீது கொஞ்சம் கொஞ்சமாக இம்ப்ரஸ் ஆவது, ஆனால் ஹீரோயினுக்கு ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்திருப்பது, ஹீரோவின் தோழியோ அல்லது ஆபீஸில் வேலைப்பார்க்கும் பெண்ணோ ஹீரோவின் குட்வில்லை ஹீரோயினிடமே சொல்வது, ஹீரோவின் அம்மா அல்லது அப்பா காதலுக்கு பச்சை கொடி காட்டுவது, இதனால் ஹீரோயின் மனம் மாறினாலும் நிச்சயதார்த்தம் பண்ணிய அந்த அப்பாவி ஆளுக்காக தவிப்பது, ஆனால் ஆச்சர்யமூட்டும் வகையில் ஹீரோயினின் ‘பியான்ஸே’வே காதலைச் சேர்த்து வைப்பதற்கான லீட்டை கொடுப்பது, அப்புறம் என்ன நமக்கு பழக்கப்பட்ட அதே க்ளைமாக்ஸை வைத்து முடிப்பது இன்னும் எவ்வளோ நாட்களுக்கு?

நல்ல படைப்பாளிகளின் படைப்புகளையோ அல்லது பக்காவான கமர்ஷியல் படைப்புகளையோ பார்த்து பார்த்து வாங்கி வெளியிடும் ரெட் ஜெயண்ட், தன்னுடைய முக்கியமான ப்ராஜெக்ட்டுக்கு இப்படியொரு அசால்ட்டான கதை, திரைக்கதையை கையிலெடுத்தது ஆச்சர்யமில்லை. காரணம் ரொம்ப சிம்பிள்! ஒரு நல்ல கணவர் தனது மனைவியின் லட்சியங்களுக்காக எவ்வளோ பட்ஜெட் ஆனாலும் கவலைப்படாமல் களமிறங்குவார்.. திருமணத்திற்கு பிறகும் மனைவி காதலிதான்… ஸ்வீட் எடு கொண்டாடு என்ற ஒரு அருமையான ஒன்லைன்னை அண்டர்லைனில் காட்டுகிறது.

படத்தின் மிக முக்கியமான பிரச்னை…ஆரம்பத்திலிருந்தே அனிரூத்..தனிரூட்டில் மியூஸிக் இன்ஸ்ட்ரூமெண்ட்ஸை போட்டுத் தாக்கியதுதான். என்னாச்சு பாஸ்? மைண்ட்டை டைவர்ட் பண்ணாமல், ‘யூ டெர்ன்’ போட்டு வந்து ட்யூன்னை போட்டால் அனிரூத் இனி ஹனி ரூத். இல்லைன்னா சாரி பாஸ் நோ கமெண்ட்ஸ்!

படத்தில் ப்ரியா ஆனந்தின் நடிப்பு கேஷூவலாக இருக்கிறது. சில இடங்களில் மேக்கப், ஹேர் ஸ்டைல் குழப்பத்தால் தத்தளிக்கிறது ப்ரியா ஆனந்தின் லுக். ஆனாலும் சில இடங்களில் மனதைத் தொடும் அவரது அழகு ஒரு தனி கிக்.

வழக்கம் போல சிவா. SAME PERFORMANCE. SAME LOOK. SAME DIALOGUE DELIVERY. SAME EMOTIONS. SAME EXPRESSIONS. இன்னும் பல SAME களைப் போட்டுக்கோங்க. MONOTONUS ஆக படத்துக்கு படம் நடிச்சாலும், நல்லாவே தாக்குப்பிடிக்கிறீங்க. REALLY U R A LUCKIEST PERSON DUDE!

க்ளிஷேக்கள் க்ளியராக இருந்தாலும், டைம் பாஸூக்கு ’வணக்கம் சென்னை’ ஓ.கே!.

இரா. ரவிஷங்கர்.

1 thought on “வணக்கம் சென்னை – சினிமா விமர்சனம்! By இரா. ரவிஷங்கர்.

  1. மொக்க படம். ஒரு கள்ள காதல் கதை. இயக்குனர் பெண் என்பது மேலும் கேவலமா இருக்கு.நிச்சயதார்த்தம் முடிந்து திருமணத்துக்கு தயாராக இருக்கும் ஒரு பெண்ணின் கள்ள காதல் தான் கதை. கடைசியில் அந்த கள்ள காதல் வெற்றி பெறுகிறது. என்ன கொடுமை சார். இவங்க காமடி என்கிற பெயரில எப்படி எல்லாம் கூத்தடிகிறாங்க.

Comments are closed.