வட சென்னையின் இன்னொரு பக்கத்தைக் காட்டும். ’ஆக்கம்’ – ஷுட்டிங் ஸ்பாட் ஆல்பம்

இயக்குநர் மு.களஞ்சியத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஞானசம்பந்தம் இயக்கும் முதல் படம் ‘ஆக்கம்’.ஆதிலட்சுமி பிலிம்ஸ் சார்பில் E. செல்வம், E. ராஜா இருவரும் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்கள். இந்தப் படத்தில் ஹீரோவாக சதீஷ் ராகவன் என்ற புதுமுகம் நடிக்கிறார். சில மலையாளப் படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கும் வைதேகி தமிழுக்கு இந்தப் படத்தின் மூலமாக அறிமுகமாகிறார். மேலும் பிரபல நடிகர் ரஞ்சித், தருண்குமார், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.“இது வட சென்னையின் இன்னொரு பக்கத்தைக் காட்டும்.. ஒருவன் எங்கு பிறக்கிறான் என்பதை வைத்து அவன் வாழ்க்கை நிர்ணயிக்கப் படுவதில்லை. அவன் எப்படி, எந்த சூழலில் வளர்கிறான் என்பதை வைத்தே அவன் வாழ்க்கையின் எதிர்காலம் நிர்ணயிக்கப் படுகிறது. அதைத்தான் இந்தப் படத்தில் திரைக்கதையாக்கியிருக்கிறேன்…” என்கிறார் இயக்குநர் ஞானசம்பந்தம்.மேலும் “இந்தப் படத்துல பவர் ஸ்டார் சீனிவாசனும் ஒரு கேரக்டர்ல நடிச்சிருக்கார். ஜெயிலுக்குள்ளயே பெரிய ரவுடியா இருப்பார்.. அவரோட ரசிகர்களுக்கு இது ரொம்பப் பிடிக்கும்னு நினைக்கிறேன்…” என்றார் அவர்.