October 16, 2021

‘வடகிழக்கு பருவமழை வரப் போகுது’: வானிலை ஆய்வு மையம் தகவல்

பொதுவாக, தென்மேற்கு பருவமழையை வைத்தே, வடகிழக்கு பருவமழை கணிப்பு இருக்கும் அதன்படி இந்த நிலையில் தற்போது தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்துள்ளதால் இன்னும் ஓரிரு நாளில் வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த வடகிழக்கு பருவமழை டிசம்பர் மாதம் கடைசி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
15 - climate
ஆண்டுதோறும் இந்திய பெருங்கடல் பகுதியில், தென்மேற்கு திசையில் இருந்து வீசும் ஈரக்காற்று அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை இமயமலை பகுதியில் வடகிழக்கு திசையில் இருந்து எதிர்மறையாக வீசுவதால் இந்த காற்றானது மேற்கு தொடர்ச்சி மலையில் மோதி தமிழகத்தில் பரவலாக மழை பொழிகிறது. அதனால், தமிழகம் ஆந்திரா போன்ற மாநிலங்கள் வடகிழக்கு பருவமழையால் அதிகம் பயன்பெறுகின்றன.

மேலும் கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைகள் எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. தமிழகத்தில் விவசாயம் நடைபெறாமல், வறட்சி நிவாரணம் வழங்கும் நிலை ஏற்பட்டது. ஆனால், இந்த ஆண்டு தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை என்றாலும், கேரளா, கர்நாடகா, மராட்டியம், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் சராசரியைவிட 15 சதவீதம் கூடுதல் அளவு மழை பெய்துள்ளது. சென்னையை பொறுத்தவரை, வெப்பச்சலனம், வளிமண்டல மேல் அடுக்கில் ஏற்பட்ட சுழற்சி காரணமாக அவ்வப்போது மழை பொழிந்தது.

பொதுவாக, தென்மேற்கு பருவமழை பொழிவை வைத்தே, வடகிழக்கு பருவமழை கணிக்கப்படுகிறது. அதனால், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையும் சராசரியைவிட கூடுதலாக பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.