September 20, 2021

‘ வடகறி’ மூலம் எதிப்பை மீறி தமிழுக்கு வரும் சன்னி லியோனி ஆல்பம்

கனடாவில் தயாராகும் நீலப்படங்களில் முன்னணி ஸ்டாராக வலம் வந்து கொண்டிருந்தவர் சன்னி லியோனி. இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இவர் அங்கு பல வருடங்களாக கொடிகட்டிப் பறந்து வந்தவரை பிரபல ஹிந்தி தனியார் டிவி சேனல் ஒன்று பிக்பாஸ் என்ற டிவி ஷோ நிகழ்ச்சிக்கு இந்தியாவுக்கு அழைத்து வந்தது.அதன்மூலம் பாலிவுட் ரசிகர்களிடம் பிரபலமான அவருக்கு தொடர்ந்து ஹிந்திப்பட வாய்ப்பு வந்ததால் இப்போது பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.இப்படி பாலிவுட்டுக்கு வந்த பிறகு அவருடைய ‘வழக்கமான’ படங்கள் குறைந்து போனாலும் ரசிகர்களிடையே அவருக்கு இருக்கும் மவுசு மட்டும் குறையவே இல்லை.

இதை உணர்ந்த கருணாநிதி பேரன் தயாநிதி அழகிரி தயாரிக்கும் ஜெய், ஸ்வாதி நடிக்கும் ‘வடகறி’ என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட இவரை ஒப்பந்தம் செய்துள்ளனர். இது குறித்து தகவல் வெளியானதும் இவரது தமிழ் வருகைக்கு இந்து மக்கள் கட்சி தன எதிர்ப்பை தெரிவித்துள்ளது.இதுகுறித்து இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் “சன்னி லியோன் போன்ற ஆபாசப்பட நடிகைகளை அனுமதித்தால் தமிழ்நாடு அத்தகைய நடிகைகள் சுதந்திரமாக நடமாட வசதியாகிவிடும்.
மேலும் ஆபாசப்படங்கள் தவறானதல்ல என்ற கருத்து உருவாகிவிடும். இது தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, தமிழ் கலாச்சாரத்துக்கே முரணாகிவிடும். ஒரு போதும் சன்னி லியோன் தமிழ் படத்தில் நடிப்பதை அனுமதிக்க மாட்டோம். அதை உரிய வகையில் தடுத்து நிறுத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.இது குறித்து தயாரிப்பாளர் தரப்பில் கேட்டால் ” அட.. இதெல்லாம் கூட பப்ளிசிட்டிதாங்க” என்கிறார்கள்!