வங்கி திவால் சட்டத் திருத்த மசோதா 2020 – பாஸ் ஆயிடுச்சு!

கொரோனா பரவல் மற்றும் பொது முடக்கத்தின் காரணமாக பல்வேறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதால், அந்நிறுவனங்கள் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், வங்கி திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்பதால் தொழில் நிறுவனங்ககளின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு வங்கி திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க விலக்கு அளிக்கும் வகையில் கடன் நொடிப்பு மற்றும் வங்கி திவால் சட்டம் 2020-ல் திருத்தும் செய்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

இந்த அவசரச் சட்டம் தொடர்பான சட்டத் திருத்த மசோதா 2020-ஐ மாநிலங்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த செவ்வாய்கிழமை தாக்கல் செய்தார். இந்த மசோதா தற்போது பல்வேறு கட்ட விவாதங்களுக்கு பிறகு மாநிலங்களவையில் நிறைவேறியது.

கடந்த மார்ச் மாதத்தில் இருந்து அடுத்த 6 மாதங்கள் அல்லது அதற்கும் மேல் நீட்டிக்கப்படும் வரை இந்த காலகட்டத்தில் கடனை திருப்பி செலுத்தாத நிறுவனங்கள் மீது தற்காலிகமாக இந்த மசோதா மூலம் நடவடிக்கை எடுக்க விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மார்ச் 25ம் தேதிக்கு முன்பு வரை கடன் வாங்கி செலுத்தாதவர்கள் மீது வங்கிகள் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

வங்கி திவால் சட்டத் திருத்த மசோதா 2020 மாநிலங்களவையில் தொடர்ந்து மக்களவையில் நிறைவேற்றப்படவுள்ளது.