September 25, 2021

லேப்டாப் பேட்டரியில் இருந்து மின்சாரம்! ஆய்வில் தகவல்

இன்றைய காலக்கட்டத்தில் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும், லேப்டாப் கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கையே, இப்போது அதிகம் பயன்பாட்டில் உள்ளன. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு அரசே லேப்டாப் வழங்குவதனால், நம் அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாக லேப்டாப் இடம் பிடித்துள்ளது. லேப்டாப் கம்ப்யூட்டர் ஒன்றின் பேட்டரி, அதன் செயல் பாட்டில் முக்கிய இடம் வகிக்கிறது. இந்தியாவில் 5 கோடி கம்ப்யூட்டர்கள் உள்ளன. அடுத்த சில ஆண்டுகளில், 7.5 கோடியை தாண்டும். முன்பு ஒரு கம்ப்யூட்டரின் ஆயுள் 5 முதல் 7 ஆண்டுகள். தற்போது 2 முதல் 3 ஆண்டுகளாகி விட்டது. நாடு முழுதும் ஐம்பது லட்சம் பழைய கம்ப்யூட்டர்கள் சிதைந்து உள்ளன. இக்கழிவுகள் மக்காதவை. இக்கழிவுகளில் பெலாடியம், வெள்ளி போன்ற உலோகங்களும், தீங்கு விளைவிக்கக்கூடிய காரீயம், காட்மியம், பாதரசம் போன்ற உலோகங்களும் உள்ளன. இ-கழிவுகள் டில்லி, மும்பை, சென்னை, பெங்களூருவில் அதிகம் கொட்டப்படுகின்றன. மும்பையில் மட்டும் ஆண்டு ஒன்றிற்கு, 25,350 டன் இ- கழிவுகள் கிடைக்கின்றன. உபயோகமற்ற பேட்டரி செல்களும் கொட்டப்படுகின்றன. இதனால் நீர், நிலம், காற்று ஆகியவை அதிகம் பாதிக்கப்படுகின்றன. இக்கழிவுகளில், 5 சதவீதத்திற்கும் குறைவாக மட்டுமே மறு சுழற்சி செய்யப்படுகிறது. மீதி 95 சதவீத கழிவுகளை ஒன்றும் செய்வதில்லை.இதனிடையே இந்தியாவில் பழைய லேப்டாப் பேட்டரியை கொண்டு குடிசைபகுதிகளுக்கு மின்சாரம் வழங்க முடியும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற வளரும் நாடுகளிலும் மின்சாரம் வழங்க முடியும் என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
laptop india
தமிழகத்தில் அரசு சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்கள் வழங்கப்படுகின்றன. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் இவை பயனற்று போகும் போது கழிவுகளின் அளவு அதிகரிக்கும். அமெரிக்காவின் சான் ஜோஸ் நகரில் நடந்த மாநாட்டில், அப்புறப்படுத்தப்படும் பேட்டரிகளின் மாதிரிகளை கொண்டு செய்யப்பட்ட ஆய்வில், எல்.இ.டி. விளக்கை ஒருவருடத்திற்கு, நாள் ஒன்றிற்கு 4 மணி நேரங்களுக்கு மேலாக எரியசெய்யும் அளவு 70 சதவீத ஆற்றல் உள்ளது என்று ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது. ஐ.பி.எம். இந்தியா ஆய்வு குழுவினரின் தகவலின்படி, இந்தியாவில் ஒரு வருடத்திற்கு சுமார் 50 மில்லியன் லித்தியம் அயன் லேப்டாப் பேட்டரிகள் அப்புறப்படுத்தப்படுகிறது, இதன்மூலம் வளரும் நாடுகளில், போதுமான அளவு வீடுகளுக்கு மின்சாரம் சேமிப்பை வழங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்.இ.டி. விளக்குகளை சூரிய சக்தி மூலமும், ரிசார்ஜ் செய்யப்பட்ட பேட்டரிகளை கொண்டும் ஒளிரச்செய்ய முடியும், இருப்பினும், அப்புறப்படுத்தப்படும் பேட்டரிகள் அணுகுமுறையை மிகவும் மலிவானதாக செய்ய முடியும். என்று எம்.ஐ.டி. தொழில்நுட்ப ஆய்வகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “இம்முறையில் மிகவும் விலையுயர்ந்த கூறு பேட்டரியாகும். மின்சாரம் சேமிக்கும் விலையுயர்ந்த பகுதியும் குப்பையை இருந்து வருகிறது.” என்று மின்சார குழு ஆய்வு ஆராய்ச்சி விஞ்ஞானி விகாஸ் சந்தன் தெரிவித்துள்ளார்.

ஐபிஎம் குரூப், அகற்றப்படும் லேப்டாப் பேட்டரி பேக்கேஜை திறந்து செல்கள் எனப்படும் தனிப்பட்ட சேமிப்பு அலகுகள் பிரித்தெடுக்கிறது. பின்னர் அதனை தனித்தனியாக சோதனை செய்து நல்லதை எடுக்கிறது, அவற்றை ஒன்றிணைத்து மீண்டும் புதியவற்றை உருவாக்குகிறது. பிறகு சுற்றுகளில் வெப்பமடைவதை தடுத்து, அத்துடன் சார்ஜ் டாங்கில்கள் சேர்த்து, பெங்களூரில் குடிசைப்பகுதியில் வசிக்கும் 5 பயனாளிகளுக்கு வழங்கியுள்ளது. 3 மாதங்களுக்கு பின்னர் மின்கலன் நன்றாக பணியாற்றுகிறது என்று பயனாளிகள் தெரிவித்துள்ளனர்.