October 16, 2021

லஷ்கர்-இ- தொய்பா அமைப்பிற்கு இலங்கையில் பயிற்சி முகாம்!:

இந்தியாவில் தீவிரவாதச் செயலில் ஈடுபடும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புக்கு இலங்கையில் பயிற்சி கொடுக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.மேலும், இலங்கை வழியாக இந்தியாவுக்குள் கள்ள ருபாய் நோட்டுகளை கடத்தவும் லஷ்கர் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
6 - taliban
இந்தியாவில் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் லஷ்கர் அமைப்பிற்கு இலங்கையில் பயிற்சி அளிக்கப்படுவதாக வந்துள்ள தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் கிழக்கு கடற்கரை கிராமங்கள், நகரங்களில் லஷ்கர் அமைப்பிற்கு பயிற்சி அளிக்க முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. லஷ்கர்-இ-தொய்பா பயிற்சி முகாம் அமைக்க, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பு உதவி செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் சகோதரர் ஷபாஸ் ஷெரிப்பும் ஆதரவு அளிப்பதாக கூறப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் என்ற போர்வையில் லஷ்கர் தீவிரவாதிகள் இலங்கைக்கு செல்வதும் அம்பலமாகியுள்ளது.

இலங்கையில் தளம் அமைத்து இந்தியா மற்றும் ஐரோப்பாவில் பெரும் தாக்குதல்களை நடத்த லஷ்கர் அமைப்பு சதித்திட்டம் தீட்டியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அதிர்ச்சி தகவல்கள் சர்வதேச தீவிரவாதிகளை கண்காணிக்கும் நிறுவனம் மூலம் அம்பலமாகியுள்ளதாக தெரிகிறது. சர்வதேச கண்காணிப்பு நிறுவனத்தை காட்டி சன்டே கார்டியன் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், இலங்கை வழியாக இந்தியாவுக்குள் கள்ள ருபாய் நோட்டுகளை கடத்தவும் லஷ்கர் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. கள்ள நோட்டு கடத்தப்படுவதை இந்திய தூதரக அதிகாரி ஒருவரும் உறுதிபடுத்தியுள்ளார்.