September 25, 2021

லஞ்சம் கொடுக்க மறுத்த பெண்ணை செங்கலால் தாக்கிய ஹெட் கான்ஸ்டபிள்! வீடியோ

டெல்லியில் போக்குவரத்து விதியை மீறி விட்டார் என்று கூறி ஒரு பெண்ணுட ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்துது அவரை செங்கலால் தாக்கிய டிராபிக் கான்ஸ்டபிள் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளார்.
delhi police
ஐந்து வயது குழந்தையுடன் டூ வீலர் ஒன்றை ஓட்டி வந்த பெண்மணியிடம் போக்குவரத்து விதிகளை மீறிவிட்டார் என கூறி அவரிடம் கான்ஸ்டபிள் மாமூல் கேட்டுள்ளார். அதைக் கொடுக்க மறுத்த அந்த பெண்ணை கான்ஸ்டபிள் அசிங்கமாக திட்டி ரோட்டில் கிடந்த செங்கல்லை கொண்டு தாக்கியுள்ளார். கூடவே தனது சிறு குழந்தையையும் அவர் திட்டினார் என அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று யூ டியூப்பில்வெளியானதை அடுத்து அந்த டிராபிக் கான்ஸ்டபிள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளதுடன் அவர் மீது எஃப் ஐ ஆரும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து டெல்லி மாநகர காவல் ஆணையாளர் பி.எஸ். பஸ்சி கூறும்போது, எனது மற்றும் டெல்லி போலீஸ் சார்பாக நான் வருத்தம் தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.தலைமை கான்ஸ்டபிள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு விட்டார். அதனை தவிர்த்து குற்ற வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் குறித்து நாங்கள் விசாரணை நடத்துவோம் என அவர் கூறியுள்ளார்.

இது குறித்து சிறப்பு காவல் ஆணையாளர் (போக்குவரத்து) முக்தேஷ் சந்தர் கூறும்போது, ”இது போன்ற அவமான செயலுக்காக நாங்கள் வருத்தம் கொள்கிறோம். இது தொடர்பாக கடுமையான நடவடிக்கையை எடுப்போம்” என்றும் கூறியுள்ளார்.

நடந்த சம்பவத்தின் வீடியோ இதுதான் :