January 22, 2022

ரொட்டி துண்டுகளுக்காகவும் (சாண்ட்விச்) சீஸ்களுக்கும் கூட விபசாரம்! – கிரீஸ் நாட்டின் அவலம்

விபச்சாரம் என்பது எப்போது தோன்றியது ? கேட்டால் . மற்ற நாடுகளில் பல விதமாக சொன் னாலும், நம் நாட்டில் 2ம் நூற்றாண்டிலேயே நடந்ததாக வரலாற்றுக் கதைகள் உள்ளன. தமிழ் நாட்டில் – சிலப்பதிகாரம்.வடக்கே வை சாலி நகரத்தில் இருந்த “அமர்பாலி” என்கிற தாசிப் பெண்.–பின்னர் புத்த மதத்துறவி ஆன கதை –ம்ருச்சகடிகா இன் னும் கொஞ்சம் லேட்டாக யோசித்தால் தமிழ்நாட்டில் “தேவதாசி” (கடவுளுக்கு அடிமை ) என்கிற பெயரில் சில குடும்பங்களில் பொட்டு கட்டி விடும் வழக்கம் இருந்தது தெரிந்திருக்கும். கடவுளின் பெயரைச் சொல்லி ஊரில் உள்ள பெரிய மனிதர்களின் கைப்பாவைகளாக அவர்கள் ஆட்டி வைக்கப்பட்டார்கள். நல்ல வேளையாக இதையெல் லாம் 1947-ல் நிறைவேற்றப்பட்ட “தேவதாசி முறை ஒழிப்பு சட்டம்” மூலம் ஏறக் கட்டி விட்டோம்.
pros nov 27
ஆனாலும் நீக்கற நிறைந்துள்ள இத்தொழிலில் என்ன மாதிரி சூழ்நிலைகளில் பெண்கள் ஈடுபடு கிறார்கள் என்று பல ரும் அறிவார்கள். அயோக்கியர்களால் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி அழைத்து வரப்பட்ட ஏழைக் குடும்ப ப் பெண்கள், காதலிப்பதாகச் சொல்லி ஏமாற்றி கைவிடும் கயவர்களால் பாதிப்புக்கு உள்ளான பெண்கள், சினிமா ஆசையால் வீட்டை விட்டு ஓடி வந்து சீர்கெட்டு போன பெண்கள், இந்த தொழிலில் ஏற்கெனவே இருப்பவர்களின் சகவாசத்தால் வந்த பெண்கள், குடும்பத்தைக் காப்பாற்ற வேறு வழி இல்லாமல் இதையே தொழிலாக மேற்கொண்ட பெண்கள் – இப்படி எத்தனையோ விதங்கள்.

இப்படி பல்வேறு காரண, காரியங்களால் காலம் காலமாகத் தொடர்ந்து 20-ம் நூற்றாண்டுக்குப் பிறகு இந்த விபச் சாரம் என்பது பல்வேறு பரிமாணங்களில் தலையெடுக்க ஆரம்பித்தது. சில விபச்சாரிகள் தங்களை கார்ல்கேர்ள்ஸ்” என்றழைத்துக் கொண்டு தங்களுக்கென்று ஒரு முகவரி யில் இருந்து கொண்டு வாடிக்கையாளர்களைத் திருப்திப் படுத்த ஆரம்பித்தனர். இன்னும் சிலர் மசாஜ் பார்லர்களில், அதாவது விபச்சார விடுதி என்றில்லாமல் புதிய வகை முகத்தோடு தொழில் செய்ய ஆரம்பித்தனர். அநேகமாக தெருவில் வசிக்கக் கூடியவர்கள் தான் இது மாதியான விபச்சார விடுதிகளுக்கு வாடிக்கையாளர்களைக் கொண்டு சேர்க்கக் கூடியவர்களாக இருந்தார்கள். இன்னும் கிராமப் புறங்களிலிருந்து நகர்ப்புறம் நோக்கி வரக் கூடியவர்கள், தங்களது வாழ்க்கைத் தேவையை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு, இந்தத் தொழிலில் கால் பதிக்க ஆரம்பித்தனர்.அதே சமயம் வீட்டை விட்டு ஓடி வந்த ஆண்களில் சிலர் வாடிக்கையாளர்களைக் கொண்டு வருபவர்களாக மாறினார்கள், பெண்கள் விபச்சார விடுதிகளில் பணியாற்ற ஆரம்பித்தார்கள்.

பொதுவாக எல்லா சமூகங்களிலும் விபச்சாரத்தை அங்கீகரிக்கவில்லை என்றாலும், பல அரசாங் கங்கள் இதனைத் தடை செய்திருந்தாலும், விபச்சாரத்திற்கு ஆதரவு தருவது, விபச்சாரி களை வைத்திருப்பது அல்லது அது சார்ந்த தொழிலின் மூலம் வருமானம் பார்ப்பது ஆகியவையே சட்டங் களால் தடை செய்யப்பட்டது என்றாகி உள்ளது. இன்னும் இந்தத் தொழிலில் ஈடுபடக் கூடிய விபச்சாரிகளின் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட்டதே ஒழிய, அவர்களது வாடிக்கையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

மேலும் அநேகமாக விபச்சார மையங்களை ஆண்களே நடத்துபவர்களாக நிர்வகிப்பவர்களாக இருக்கின்றார்கள், பெண்கள் தங்களது உடம்பை விற்றுப் பெறுகிற கூலியில் இந்த ஆண்களே அதிக ஊதியத்தை எடுத்துக் கொண்டார் கள். சம்பாத்தியத்தில் ஓரளவு பணத்தையே அந்தப் பெண்களுக்கு வழங்கியதோடு, அரசின் நடவடிக்கைகளின் பொழுது தேவைப்பட்டால் அவர்களுக்காக பிணை யாளர்களாகவும் செயல்பட்டு அவர்களை சிறையிலிருந்து வெளியே கொண்டு வர உதவினார்கள். மொத்தத்தில் பிம்ப் எனப்படும் விபச்சார மைய நிர்வாகிக்கும், விபச்சாரிக் கும் உறவு முறைகளில் நெருக்கம் இருந்தாலும், அநேகமான நேரங்களில் விபச்சாரியே பாதிப்புக்கு ஆளாகக் கூடியவளாக இருந்தாள் என்பது தெளிவு.

இந்நிலையில் கிரீஸ் நாட்டில் சில பெண்கள் சில ரொட்டி துண்டுகளுக்காகவும் (சாண்ட்விச்) சில சீஸ் துண்டு களுக்கும் கூட விபச்சாரத்திற்கு தள்ளப்படுகின்றனர். அவர்கள் அவ்வளவு பசி பட்டினியில் உள்ளனர் என தனது 3 ஆண்டு ஆய்வில் தெரிய வந்து உள்ளதாக ஏதென்ஸ் நகரின் பண்டியோன் பல்கலைக்கழக பேராசிரியர் கிரிகோரி லோக்சோஸ் லண்டன் டைம்ஸ் பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார்.

கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டில் விபச்சாரம் அதிகரித்து உள்ளது. அந் நாட்டில் 17 ஆயிரம் செக்ஸ் தொழிலாளர்கள் உள்ளனர். இங்குள்ள விபச்சார பெண் களில் கிரேக்க பெண்களே அதிகம். அவர்களுக்கு அடுத்தபடியாக ஐரோப்பிய பெண்கள் உள்ளனர். கிரீஸ் நாட்டில் விபச்சாரம் மிகவும் மலிவாக நடைபெறுகிறது என ஒரு ஆய்வில் தெரிய வந்து உள்ளது என லண்டன் பத்திரிகை தெரிவித்து உள்ளது. கிரீசில் பொருளாதார நெருக்கடி தொடங்கிய போது விபச்சார அழகிகள் 50 யூரோக்கள் (53 அமெரிக்க டாலர்கள் ) வரை கட்டணம் வாங்கினர். தற்போது அது 2 யூரோக்களுக்கு ( 2.12 அமெரிக்க டாலர் ) வீழ்ச்சி அடைந்து உள்ளதாக லோசோஸ் கூறியதாக லண்டன் பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது.

நாட்டில் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களில் 80 சதவீதம் பேர் கிரேக்க பெண்கள் என கூறி உள்ளார். கிரீசில் விபச்சாரம் சட்டபூர்வமாக்கப்பட்டு உள்ளது. ஆனால் ஒரு சில நாட்டின் விபச்சார கூடங்கள் தான் உரிமம் பெற்று உள்ளன. தெருவில் 18,500 விலைமாதர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.இந்த ஆய்வு அறிக்கைகள் வந்த பின்னர் கடந்த மாதம் வேலையில்லாத ஒரு பட்டதாரி தயார் தனது 12 வயது மகளை விபச்சாரத்திற்காக ஒரு மத குரு மற்றும் ஓய்வுபெற்ற ஒருவருக்கும் விற்பனை செய்து உள்ளார். 44 வயதாகும் அவருக்கு 33 வருட சிறை தண்டனையும், ஒரு லட்சம் யூரோவும் அபராதமாக விதிக்கப்பட்டு உள்ளதாக அந்த பத்திரிகை தெரிவித்து உள்ளது. கிரேக்க பத்திரிகைகள் அந்த பெண்ணுக்கு ’அரக்க அம்மா’ என பெயரிட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நம்ம வாத்தியார்