September 20, 2021

ரூ.200 கோடி பங்குகளை பணியாளர்களுக்கு கொடுத்த ஹவுசிங்.காமின் நிறுவனர்!

ரியல் எஸ்டேட் இணைய தளங்களில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு முன்னேறி வரும் ஆன்லைன் நிறுவனங்களில் ஹவுசிங்.காம் நிறுவனம் முக்கியமானதாகும். இந்நிறுவனத்தில் 9 கோடி டாலரை ஜப்பானைச் சேர்ந்த சாப்ட்பேங்க் முதலீடு செய்தபோது இந்நிறுவனம் அனைவரது கவனத்தையும் பெரிதாக ஈர்த்தது. இது தவிர பிற முதலீட்டாளர்களும் இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.
housing dot com
இந்நிலையில் ஹவுசிங்.காம் நிறுவனர்களில் ஒரு வரும் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான ராகுல் யாதவ், தன் வசமிருந்த அனைத்து பங்குகளையும் ஊழியர்களுக்கு அளித்துவிட்டார். இந்நிறுவனத்தில் இவருக்கு 4.5 சதவீத பங்குகள் உள்ளன. இவற்றின் மதிப்பு ரூ. 150 கோடி முதல் ரூ. 200 கோடியாகும். இந்த பங்குகளை நிறுவனத்தில் பணியாற்றும் 2,251 ஊழியர்களும் பகிர்ந்து கொள்ளலாம் எனக் கூறியுள்ளார்.நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியின் இந்த அதிரடி முடிவால் நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் நிறுவன பங்குதாரர்களாகியுள்ளனர்.

இருப்பினும் யாதவின் முடிவால் ஊழியர்கள் இன்ப அதிர்ச்சியடைந்துள்ளனர்.ஊழியர்களுக்கு ஓராண்டு சம்பளம் ஒரே சமயத்தில் கிடைப்பதைப் போல இந்த பங்குகள் அவர்களுக்குக் கிடைத் துள்ளன. இந்நிறுவனத்தில் இவருக்கு 4.5 சதவீத பங்குகள் உள்ளன. இவற்றின் மதிப்பு ரூ. 150 கோடி முதல் ரூ. 200 கோடியாகும். இந்த பங்குகளை நிறுவனத்தில் பணியாற்றும் 2,251 ஊழியர்களும் பகிர்ந்து கொள்ளலாம் எனக் கூறியுள்ளார்.

ஹவுசிங்.காம் நிறுவனம் 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மும்பை ஐஐடி-யைச் சேர்ந்த 12 நண்பர்கள் குழு ஆன்லைன் தளத்தை உருவாக்கினர். வீடு வாடகைக்கு விடுவது, விற்பது, வாங்குவதற்கு வசதியாக இந்த தளம் செயல்பட்டது. இதில் அதிக பட்ச பங்குகள் யாதவ் வசம் இருந்தன. மற்ற நிறுவனங்களிடம் ஒட்டுமொத்தமாக 9 சதவீத பங்குகள் உள்ளன.இந்நிறுவனத்தில் சாப்ட்பேங்க் நிறுவனத்துக்கு 32 சதவீத பங்குகளும் நெக்சஸ் வெஞ்சர்ஸ் பார்ட்னர்ஸ் நிறுவனத்திடம் 19 சதவீத பங்குகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.