February 8, 2023

”ரூபாய் மதிப்பு சரியவில்லை; டாலரின் மதிப்பு உயர்வு!” – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

மெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ரூபாய் மதிப்பு சரிவு குறித்த செய்தியாளர் கேள்விக்கு அவர் அளித்த பதில்,

அமெரிக்க டாலரின் மதிப்பு சர்வதேச சந்தையில் வலுவான நிலையில் உள்ளது. இதனால் மற்ற அனைத்து நாடுகளின் நாணயங்களும் அதற்கு எதிராகவே செயல்படுகின்றன. நான் தொழில்நுட்ப ரீதியாக பேசவில்லை. எனினும், அந்த வகையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சீராகவுள்ளது.

சர்வதேச சந்தையில் மற்ற நாடுகளின் நாணய மதிப்புகளை விட இந்திய ரூபாயின் மதிப்பு மேலான நிலையிலேயே உள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடையவில்லை. அமெரிக்க டாலர் மதிப்பு கூடுதலாக உயர்ந்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் முயற்சிகள் அனைத்தும் ஏற்றத்தை நோக்கியதாகவே உள்ளது என நினைக்கிறேன் எனக் குறிப்பிட்டார்.