September 18, 2021

ருத்ரமாதேவி -யில் அனுஷ்கா ஸ்பெஷல் ஆல்பம்!

அனுஷ்கா நடித்து மிக பிரமாண்டமாக வெளியாகி வசூலில் சாதனை படைத்துக்கொண்டு இருக்கும் படம் ருத்ரமாதேவி.தென்னகத்தின் லேடி சூப்பர் ஸ்டார் என்று மீடியாக்களால் வர்ணிக்கப்படும்
அனுஷ்கா மகாராணியாக நடித்துள்ள ‘ருத்மாதேவி’ கடந்த 9–ந்தேதி தெலுங்கில் ரிலீஸ் ஆகி ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மட்டும் கடந்த இரண்டு நாட்களில் 18.11 கோடியும் (தோராயமாக), இந்தியாவின் மற்ற மாநிலங்களில் 10 கோடியும்(தோராயமாக) வசூல் செய்ததாக கூறப்படுகிறது.


சில மாதங்களுக்கு ரிலீசான ‘பாகுபலி’ ரசிகர்கள் மத்தியில் இன்று வரை கொண்டாடப் பட்டாலும் அதில் அனுஷ்காவுக்கு எந்த பிரயோஜனமும் இல்லாமல் போய் விட்டது. காரணம் அதில் அனுஷ்காவை விட தமன்னாவுக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. இதனால் அனுஷ்காவின் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் அனுஷ்காவுக்கே கொஞ்சம் வருத்தம் இருக்கத் தான் செய்தது.என்றாலும் மனதைத் தேற்றிக் கொண்டு இரண்டாம் பாகத்துக்காக காத்திருந்தவருக்கு அடுத்த சந்தோஷ செய்தியாக ‘ருத்ரமா தேவி’ ரிலீசாகி விட்டது. பல தேதிகள் அறிவிக்கப்பட்டு கடந்த வாரம் ரிலீசான அந்தப்படம் வெளிநாடுகளில் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இந்நிலையில் ருத்ரமாதேவி யை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வருகிற 16 ஆம் தேதி தமிழில் வெளியிடுகிறது.