October 16, 2021

ரிலாக்ஸா இருக்கணுமா? நிம்மதியா தூங்கணுமா?அப்ப இந்த வீடியோவைப் பாருங்க.. கேளுங்க!

பசுமையான இயற்கை காட்சி ,அமைதி நிறைந்த நீர் ஓடையின் சத்தம், பறவைகளின் சத்தம் உணமையில் மனிதனுக்கு மன அமைதியை தந்து அவனது மன அழுத்தங்களை குறைக்கிறது. என்பதற்கு எடுத்துகாட்டு இந்த வீடியோதான். இதனை தொடர்ந்து பார்ப்பது தியானம் செய்வதை போன்றது.
relax
விஷுவல் கலைஞர் ஒருவரால் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவிவருகிறது. இந்த வீடியோவை பார்ப்பதன் மூலம் மன அழுத்தம் குறைவதுடன் சுகமான இரவு தூக்கத்தையும் கொடுப்பதாக தெரியவந்துள்ளது. இதுவரை 69 லட்சம் பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளார்கள்.நதியின் குளுமையையும், காற்றின் அரவணைப்பையும் பார்வையாளரால் உணரமுடியும் என்பதுதான் இதன் சிறப்பு.

இதுபோல் வீடியோவை முன்வைத்து மருத்துவ துறையில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் லண்டனை சேர்ந்த மருத்துவமனையின் உளவியல் மருத்துவர் ஒருவர் கூறும் போது, ‘சிகிச்சையின் ஒரு பகுதியாக இது போன்ற வீடியோக்கள் அடங்கிய டேப்லெட்களை நோயாளிகளிடம் கொடுக்கும் போது அவர்களின் மன அழுத்தம் குறைவதுடன் சுகமான இரவு தூக்கத்தையும் கொடுப்பதாக’ தெரிவித்துள்ளார்.

நமது பல்வேறு தேவைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள வீடியோ தொகுப்புகளில் இதுவும் ஒன்று. நீங்கள் படிக்கும் பொழுது பின்னணியில் அமைதியான ஒலியில் இசைப்பது அல்லது தூங்கும் பொழுது இனிமையான ஒலி இசைப்பது ஆகிய பல்வேறு தேவைகளுக்காக இந்த வீடியோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வீடியோவை பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து அறிந்து கொள்வோம்.

உங்களது படிப்பு அல்லது நல்ல தூக்கம் ஆகியவற்றை எப்படி மேற்கொள்வது என்பதற்கு உதவி செய்யும் வகையில் ஒரு செய்தி ஒவ்வொரு வீடியோவிலும் இருக்கும். நன்றாக படிப்பதற்கு தரமான கவனம் தேவை. திறமையாக படிப்பதற்கான திட்டம் இன்றி எந்த கற்றல் விசயத்தையும் மேற்கொள்வது என்பது கடினமானது.

தேர்வுக்கு படிக்கும்போது தரமான கவனம் உங்களை கூடுதல் மதிப்பெண்கள் பெற செய்வதுடன் அடுத்த நிலைக்கு ஆற்றலுடன் உங்களை கொண்டு செல்லும். நீங்கள் வழக்கமாக பணியாற்ற முடிந்த அமைதியான இடத்தை அமைத்து கொள்ளுங்கள். இந்த இடம் படிப்பதற்காக அர்ப்பணிக்கப்படுவதுடன், நண்பர்கள், குடும்பம் மற்றும் வளர்ப்பு பிராணிகளிடம் இருந்து கூட தனித்து இருக்க வேண்டும். எளிதான மற்றும் காற்று வீசும் இடமாக அதனை வைத்து கொள்வதுடன், கூட்டத்தையும் தவிர்க்க வேண்டும்.

உங்களது நாற்காலி உறுதியான மற்றும் வசதியான வகையில் முதுகு பிரச்சனைகள் மற்றும் கழுத்து வலி ஆகியவற்றை தவிர்க்க உதவும் வகையில் இருக்க வேண்டும். உங்களது படிக்கும் பகுதி வெளிச்சம் நிறைந்து இருப்பதை உறுதி செய்யவும். கவனம் செலுத்த ஏற்ற வெப்பநிலை இருப்பதையும் உறுதி செய்து கொள்ளவும். கவனத்தில் உள்ள தரம், புரிதலில் தரத்தை ஏற்படுத்தும். அதனால் நீங்கள் கற்றவற்றை செயல்படுத்தும் திறன் கொண்டவராக ஆவீர்கள். இது போன்ற சூழலில் நடைபெறும் வழக்கமான பணியானது, நல்ல, திறமையான படிக்கும் பழக்கங்கள், ஒருமுகப்படுத்துதல் மற்றும் கவனம் ஆகியவற்றை மேம்படுத்துகிறது. விலை மதிப்புமிக்க நேரம் வீணாவதையும் மற்றும் பதற்றம் ஏற்படுவதையும் அது குறைக்கிறது.