October 16, 2021

‘ரிச்’, ‘செக்சி’, ‘நின்ஜா’ – போன்ற பெயர்களில் புதிய டொமைன்கள்!

இன்டெர்நெட் முகவரிகள் பொதுவாக டொமைன் பெயர் என்று குறிப்பிடப்படுகின்றன. இவற்றில் பல ரகம் உண்டு. பரவலாக நாம் அறிந்த டாட் காம்-ஐ தவிர டாட் ஓஆர்ஜி, டாட் நெட் போன்ற முகவரிகளும் இருக்கின்றன. இதைத் தவிர ஒவ்வொரு நாட்டின் பெயரை குறிக்கும் சுருக்கத்தை கொண்ட முகவரிகளும் இருக்கின்றன.உதாரணத்திற்கு இந்திய முகவரிகள் என்றால் டாட் இன். பிரிட்டன் முகவரிகள் என்றால் டாட் யு.கே. ஆஸ்திரேலிய முகவரி என்றால் டாட் ஏ.யு. இவை சம்பந்தப்பட்ட நாடு களுக்கான பிரத்யேக இணைய முகவரிகள். டொமைன் பெயர்கள் வரலாற்றில் அவற்றில் முக்கியமானதாக கருதக் கூடியவற்றை முதலிலேயே பதிவு செய்து கொண்டு பின்னர் அதற்கு தொடர்புடையவர்கள் அதனை கேட்டு வந்தபோது பேரம் பேசி அதிக பணம் சம்பாதித்தவர்கள் இருக்கிறார்கள்.இருந்த போதிலும் இதனை அதற்கென அங்கீகாரம் பெற்ற நிறுவனம் வரையறை செய்துள்ளது.
jan 24 - -NEW-DOMAINS
இந்நிலையில், இணையதளத்தை பதிவு செய்யும் இன்டர்நெட் கார்ப்பரேசன் பார் அசைன்டு நேம்ஸ் மற்றும் நம்பர்ஸ் (ஐ.சி.ஏ.என்.என்.) நிறுவனம் புதிதாக சில வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.அதன்படி .ரிச் (.rich), .செக்சி (.sexy), .நின்ஜா (.ninja), .பிங்க் (.pink), .இ-மெயில் (.email), .பஸ் (.buzz), .காபி (.coffee) மற்றும் .டொமைன்ஸ் (.domains) ஆகியவை உள்பட 100 பெயர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. தற்போது புதிதாக தங்களது இணையதளங்களை பதிவு செய்து கொள்வதற்கு நிறுவனங்கள் இவ்வசதியினை பயன்படுத்தி கொள்ளலாம்.

7 new Web domains to be released
*****************************************************
On the Internet, .com is about to get some more company.Seven new Web domains including .bike, .guru and .clothing are scheduled to be released Wednesday, the first of hundreds of online address extensions expected to become available over the next few years.