ராகுல் தலைமையின் கீழ் பணியாற்றுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி! – மன்மோகன் சிங்

“வரும் 2014ம் ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலுக்குப்பின், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுலே, பிரதமர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவராக இருப்பார் அதிலும் காங்கிரஸ் கட்சிக்காக, ராகுல் தலைமையின் கீழ் பணியாற்றுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
sep 8 - raghul &_Singh
ஜி 20 மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு இன்று டெல்லி திரும்பும் வழியில் விமானத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மன்மோகன் சிங் இவ்வாறு கூறினார்.எதிர்க்கட்சிகளின் பெரும்பாலான கேள்விகளுக்கு பதிலளிக்காதது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தான் ஒரு திறந்த புத்தகம் என்று கூறினார். மேலும், திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தோழர்களுடனான கூட்டணி குறித்து பதிலளித்த பிரதமர், அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நண்பர்களும் இல்லை என்று கூறினார்.

அமெரிக்காவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்திப்பது குறித்து தான் இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும், பயங்கரவாதம் உள்ளிட்ட கள நிலவரங்களைப் பொறுத்தே ஷெரீப்புடனான சந்திப்பு அமையும் என்றும் தெரிவித்தார். இந்தியா பாகிஸ்தான் பிரதமர்களுக்கு இடையேயான சந்திப்பு இயல்பாக அமைவதையே தான் விரும்புவதாகவும், ஆனால் பயங்கரவாத செயல்களை நிறுத்தப்படாத வரையில் அது சாத்தியமில்லை என்றும் கூறினார்.

மேலும்அவர் கூறுகையில், வரும் 2014ம் ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலுக்குப்பின், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுலே, பிரதமர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவராக இருப்பார் என்று தெரிவித்தார். காங்கிரஸ் கட்சிக்காக, ராகுல் தலைமையின் கீழ் பணியாற்றுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும் என்று குறிப்பிட்டார்.

Rahul Gandhi is an ideal choice for the PM post, says Manmohan Singh

******************************************************************************
“I have always maintained that Rahul Gandhi would be an ideal choice for the PM post after 2014 elections (Lok Sabha). I will be very happy to work in the Congress under the leadership of Rahul Gandhi,” the prime minister told reporters accompanying him on board the special Air India aircraft on his way home after attending the G20 summit in the Russian city of St Petersburg.