December 4, 2021

ரஹ்மானின் டீசருக்கே இந்த அதிர்வா?

இத இன்பர்மேஷன் ஏஜ்னு சொல்றாங்க. கம்ப்யூட்டர் காலம், டிஜிட்டல் காலம், நியூ மீடியா காலம்னு பல பேர்கள் இருக்கு. அடிப்படையான விசயம் இன்பர்மேஷன். தகவல். செய்தி. சேதி. கடல் கடந்து மலை தாண்டி போகாமலே நடக்கிற எல்லாருக்கும் எல்லா தகவலும் கிடைக்குது. நிறைய. டூ மச் இன்பர்மேஷன் ஒரு பிரச்னையா இருக்குன்னு நிபுணர்கள் சொல்றாங்க.

எது ஓவர் ஆனாலும் பிரச்னைதான. கொட்ற தகவல்கள்ல எது நெசம் எது பொய்னு தெரியாத நிலை. ஃபேக் ந்யூஸ்னு கூகுள்ல தட்னா 92 கோடி ரிசல்ட்ஸ் வருது. எக்ஸ்பர்ட்ஸ் சொல்றத 46 சதவீத மக்கள்தான் நம்புறாங்களாம். நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்னு சொல்லி இனிம கடல மிட்டாய் விக்றதும் கஷ்டம்.

அப்ப யாரும் எதயும் மறைக்றது இல்லயா? ரகசியம்ங்ற வார்த்தய அகராதில இருந்து நீக்கிரலாமா?னு கேட்டா.. நோ! அடமழையா இன்பர்மேஷன் கொட்னாலும், வெளிச்சத்துக்கு வராத ரகசியங்கள் அத விட பல மடங்கு இருக்கும்னு தெரியிது. எந்த ரகசியத்தையும் என்னைக்காவது ஒருநாள் இது வெளில வந்தே தீரும்னு சொல்ல முடியாது.

ரஹ்மான் ஒரு இண்டியன் அய்க்கான். ரொம்ப உயரத்ல இருக்கார். தொழில் செய்ய விடாம தடுக்றாங்க..னு சொல்றதுக்கு அவரே இவ்ள காலமா தயங்கினார்னா நம்மலாம் எம்மாத்ரம்? இவ்ளக்கும் அவர் ரிலீஸ் பண்ணது வெறும் டீசர். ட்ரெய்லர் வரைக்கும் போவாராங்றதே டவுட்.

  • ஒவ்வொரு மனுசனோடயும் இந்த பூமிய விட்டு போற ரகசியங்கள்தான் பிரபஞ்சத்ல புள்ளிகளா மின்னுதோ என்னமோ..

கதிர்