September 18, 2021

ரயில் நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு! – மோடி தகவல்

”ரயில்வேயில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் என்ன வசதிகள் இருந்தனவோ அதே வசதிகள்தான் இன்றளவும் உள்ளன.எனவே, ரயில் நிலையங்களை தனியார் மயமாக்கி, நவீனப்படுத்தப்படும். இதன் முதல் கட்டமாக இதை 10, 12 இடங்களில் செய்வேன். ரயில்களில் பயணம் செய்கிறவர்களில் பெரும்பாலானோர் ஏழை மக்கள்தான். எனவே ரயில் நிலையங்கள், விமான நிலையங்களை விட சிறப்பானவையாக இருக்க வேண்டும்.”என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.
rail pvt
கவுகாத்தியில் நேற்று நடந்த விழாவில் கவுகாத்தி–மெந்திபத்தார் பயணிகள் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அப்போது நாடெங்கும் ரயில்வேயை மேம்படுத்துவது தொடர்பாக அவர்,”மத்திய அரசு ரயில்வேயை விரிவாக்கம் செய்வதோடு, நவீன மயம் ஆக்கும். அந்த வகையில் இந்தியா முழுவதும் ரயில் சேவை விரிவுபடுத்தப்படும். அத்துடன் ரயில்வேயில் திறன் மேம்படுத்தப்படும். தொழில் நுட்பம் மேம்படுத்தப்படும். சிறப்பான சேவைகள் செய்யப்படும்.

ரயில்வேயில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் என்ன வசதிகள் இருந்தனவோ அதே வசதிகள்தான் இன்றளவும் உள்ளன.எனவே, ரயில் நிலையங்கள் தனியார் மயமாக்கி, நவீனப்படுத்தப்படும். (முதல் கட்டமாக) இதை 10, 12 இடங்களில் செய்வேன். நம் ரயில்களில் பயணம் செய்கிறவர்களில் பெரும்பாலானோர் ஏழை மக்கள்தான்.இதை கவனத்தில் கொண்டு ரயில் நிலையங்கள், விமான நிலையங்களை விட சிறப்பானவையாக இருக்க வேண்டும்.

இங்கு ரியல் எஸ்டேட் உச்சாணிக்கொம்பில் இருக்கிறது.இதைக் கவனத்தில் கொண்டு ரயில்வே, தனது நிலங்களில் தனியார் துறையினர் சொகுசு ஓட்டல்கள், உணவு விடுதிகள் இன்னும் பிற வசதிகளை ஏற்படுத்துவதை அனுமதிக்க வேண்டும்.இந்த 10, 12 இடங்களில் இந்த வசதிகளை எல்லாம் செய்து முடித்துவிட்ட பின்னர், நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களை நாங்கள் நவீனப்படுத்துவோம்.

கூடுதலாக ஒரு பெட்டியை இணைத்து விட்டாலோ அல்லது ஒரு ரயில் நிலையத்தை மேம்படுத்தி விட்டாலோ நாங்கள் மகிழ்ச்சி அடைந்து விட மாட்டோம். அனைத்து வகைகளிலும் ரயில்வே மேம்பாடு காண வேண்டும். நாட்டின் பொருளாதார என்ஜினாக ரெயில்வே மாற வேண்டும்.ரயில்வேயில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுகிறது. இதுநாட்டில் ரயில் போக்குவரத்தை முழுமையாக நவீனமயமாக்க உதவும்.

மேலும், நாட்டின் 4 மூலைகளில் உள்ள இடங்களில் ரயில்வே பல்கலைக்கழகங்களை தொடங்க அரசு முடிவு செய்துள்ளது. அங்கு ரயில்வேயின் அனைத்து சேவைகளும் கற்றுத்தரப்படும்.ரயில்வே சுற்றுச்சூழலில் மாசு ஏற்படுத்தாத வெகுஜன போக்குவரத்தாக ஆக முடியும். இது உலக வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதற்கு இந்தியாவின் பங்களிப்பாக அமையும்.

உயர் மத்தியதர வர்க்கத்தினர் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை சுற்றுலா தலங்களுக்கு செல்ல விரும்புகின்றனர். நல்ல இடங்களை அவர்கள் தேடுகிறார்கள். நல்ல போக்குவரத்து வசதிகள் இருந்தால், அவர்கள் இங்கே வடகிழக்கு பகுதிக்கும் வருவார்கள். இங்கு இயற்கை எழில் கொஞ்சுகிறது. அன்பான மக்களும் இருக்கிறார்கள்.உள் கட்டமைப்பை அபிவிருத்தி செய்து விட்டால், மற்றவற்றை மக்களே செய்து விடுவார்கள்.”என்று பிரதமர் மோடி கூறினார்.