ரயிலில் டிக்கெட் கட்டணம் மினிமம் ரூ 10 ஆகிறது! – 20ம் தேதி முதல் அமல்

ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு இடையூறாக பிளாட்ஃபார்மில்ல் அதிக கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக பிளாட்ஃபார்ம் டிக்கெட் கட்டணம் ரூ.5–ல் இருந்து ரூ.10 ஆக உயர்த்தி மத்திய ரயில்வே பட்ஜெட்டில் அறி விக்கப்பட்டது. அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது.ஆனால் இதன் நோக்கம் பல இடங்களில் நிறைவேறவில்லை. இதற்கு காரணம் புறநகர் அல்லாத ரயில்களில் 2–ம் வகுப்பு குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 ஆக உள்ளது. சிலர் பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகள் வாங்குவதற்கு பதிலாக இந்த 5 ரூபாய் டிக்கெட் டுகளை வாங்கிக்கொண்டு ரயில் நிலையங்களின் நடைமேடைக்கு வருவதாக தெரியவந்தது.
???????????????????????????????????????????????????????????????????????????
இதனால் குறைந்தபட்ச ரயில் கட்டணத்தை ரூ.5–ல் இருந்து ரூ.10 ஆக, அதாவது பிளாட்ஃபார்ம் டிக்கெட் கட்ட ணத்துக்கு இணையாக உயர்த்த ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார். இந்த கட்டண உயர்வு 20–ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன் நோக்கமும் ரெயில் பயணிகளுக்கு இடை யூறாக பிளாட்ஃபார்ம்களில் கூட்டத்தை தவிர்ப்பது தான் என்று அந்த அதிகாரி கூறினார்.புறநகர் ரயில்கள் அல்லாத மற்ற ரயில்களில் 2–ம் வகுப்பு பயணத்துக்கு மட்டும் இது பொருந்தும். இதன்மூலம் பிளாட்ஃபார்ம் களில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.