September 25, 2021

ரஜினியின் கோச்சடையானுக்கு ரெட் கார்ட்!?

கடந்த இரண்டாண்டு காலத்திற்கும் மேலாக இதோ.. அதோ.. என்று ரெட் கார்ப்பட் விரிக்கபட்டு வந்த ரஜினியின் ‘கோச்சடையான்’ படம் மே 9 ரிலீஸ் ஆகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த தேதியில் படம் ரிலீஸ் ஆகாது என்றும் இப்போது அப்படத்திற்கு விநியோகஸ்தர்கள் தரப்பு மறைமுகமாக ரெட் கார்ட் போட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Kochadaiyaan-1
இது குறித்து விசாரித்த போது ‘கோச்சடையான்’ படத்தின் தயாரிப்பாளர் ஈராஸ் நிறுவனத்தைச் சார்ந்த முரளி மனோகருக்கு எதிராக திரைப்பட விநியோகஸ்தர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளதுதான் பிரச்னைக்குக் காரணம் என்றும் இவர் ஏற்கெனவே எடுத்த, வெளியிட்ட சில படங்களின் மூலம் ஏற்பட்ட நஷ்டம் ரூ 35 கோடிகளை எடுத்து வைத்தால்தான் கோச்சடையானை வெளியிட முடியும் என தமிழ் திரைப்பட கூட்டமைப்பினர் அறிவித்துவிட்டார்கள். சில தினங்களுக்கு முன் நடந்த பேச்சுவார்த்தையில், ரூ 35 கோடியில் பாதியை இந்த வாரம் கொடுத்துவிடுங்கள் என்று கூறியுள்ளனர் கூட்டமைப்பினர். ஆனால் முரளி மனோகர் இன்னும் பணம் தராததால், கோச்சடையான் விளம்பரங்களை நிறுத்தச் சொல்லிவிட்டார்கள். இது ரஜினி படம் என்பதால் வெளிப்படையாக ரெட் போடாமல் பேசிக் கொண்டிருப்பதாக கூட்டமைப்பைச செர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

மேலும் கேட்ட போது,ஈராஸ் நிறுவனத்தின் சார்பில் 125 கோடி பட்ஜெட்டில் கோச்சடையான்’ படத்தை பிரமாண்டமாகத் தயாரித்து இருக்கிறார் முரளி மனோகர். இதற்கு முன்பு இதே ஈராஸ் சார்பாக சூர்யா நடித்த ‘மாற்றான்’ படத்தை வாங்கி ரிலீஸ் செய்த போது.அந்தப் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு கிட்டத்தட்ட 12 கோடி ரூபாய் நஷ்டமாம். இதற்கு கொஞ்சம் கூட பொறுப்பேற்காமல், உரிய பதிலும் அளிக்காமல் இருந்ததால் விநியோகஸ்தர்கள் அப்செட் அடைந்து விட்டார்களாம். இதற்கிடையில் ‘கோச்சடையான்’ படத்தைத் தருவதாகச் சொல்லி 26 கோடி ரூபாயை அட்வான்ஸாக வாங்கியிருக்கிறார் முரளி. இந்நிலையில் இப்போது அந்த மொத்த பணமான 38 கோடியையும் செட்டில் செய்த பிறகுதான் ‘கோச்சடையான்’ படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் கண்டிப்புடன் சொன்ன நிலையில் .முரளி மனோகர் 20 கோடி ரூபாயைத் தருகிறேன..என்று கெஞ்சி வருகிறாராம். இதற்கிடையில்தான் த்யாரிப்பாளர் சங்கத் தலைவர் குறிப்பிட்டமாதிரி ‘ கோச்சடையான் எதிர்பார்த்த அளவு போணி ஆகவில்லை’ என்று சொன்னதில் ரஜினி தரப்பு அதிர்ந்து போயுள்ளதாம்