October 16, 2021

“யான்” – பெற்ற துன்பம்:

முகமூடியோட தாக்கத்துலேர்ந்து இன்னும் வெளிவராத நிலையில் அதுக்குள்ள யான்.

மும்பையில ஒரு மிகப் பெரிய தீவிரவாதியை ஸ்கெட்ச் போட்டு போலீஸ் கொல்லும்போது கதை ஆரம்பிக்குது. அதோட ஆரம்பிக்குது நம்ம ஹீரோ காதலும். துப்பாக்கிக் குண்டுகளுக்கு நடுவுல ஹீரோயின் கையைப் பிடிச்சு இழுத்துகிட்டு ஓடிட்டேயிருக்கார். தீவிரவாதி அவர் பக்கத்துல விழுந்து சாகும் போது காதல் வந்துடுது.

yaan
வழக்கம்போல துரத்தித் துரத்தி காதலிக்கிறார். வழக்கம்போல ஹீரோயின் கண்டுக்கலை. வழக்கம்போல ஹீரோயின் அப்பான்னு தெரியாமா ஜீவா, நாசரை கலாய்க்கிறார். வழக்கம்போல அவன்தான் சுத்துறான், எனக்கு காதலெல்லாம் இல்லைன்னு பொண்ணு சொல்ல அப்பா நம்புறாரு.

முக்கியமான விஷயம், கதை மும்பையில நடக்குது. ஆனா, ரோட்ல பைக் ஓட்டுறவன்ல ஆரம்பிச்சு எல்லாரும் தமிழ்ல பேசுறாங்க. தமிழ்த்திணிப்புன்னு மராத்திக்காரங்க போராட்டமே நடத்தலாம் போல.

சரி, கதைக்கு வருவோம். சாரி., அதைத்தான் காணோமே?!!வழக்கம்போல காதலுக்கு வில்லனா ஒரு பணக்கார சொந்தக்காரப்பையன் வரான். வழக்கத்துக்கு மாறா அவன் டைவோர்ஸ் ஆனவன். வழக்கம் போல நாசர் ஹீரோவை வீட்டுக்குக் கூப்பிட்டு வேலை இல்லாதவன்னு சொல்லி அவமானப்படுத்தரார். வழக்கம்போல, வாழ்க்கைக்குப் பணம் தேவைன்னு அப்பத்தான் ஜீவாக்குப் புரியுது. வழக்கம்போல பல க்ளோஸப் ஷாட்ஸ், சில லாங் ஷாட்ஸ் வெச்சும் அவருக்கு வேலை கிடைக்கலை.

ஒரு முஸ்லிம் நாட்டுல வேலை வாங்கித்தராரு நம்ம போஸ் வெங்கட். அங்க வெச்சிருக்காங்க ட்விஸ்ட்டை!
அவரு பையில போதை மருந்து இருந்ததால ஜெயில்ல போடுறாங்க. வழக்கம்போல இந்திய அதிகாரி ஒண்ணும் செய்ய முடியாதுன்னு கைவிரிச்சுடுறாரு. அந்த ஜெயில்லையும் ஒரு தமிழன், நம்ம தம்பி ராமைய்யா.

இன்னொரு முக்கியமான விஷயம்,அந்த நாட்லேயும் போறவன், வரவனெல்லாம் கொஞ்சமும் யோசிக்காம, உச்சரிப்பெல்லாம் ரொம்ப சரியா, தமிழ் பேசுறாங்க.

மிகக் கடுமையான,கட்டுப்பாடான சட்டங்கள் வெச்சிருக்கிற நாட்டில் ஜெயில் கதவுக்கெல்லாம் பூட்டே இல்லியாம். அன்னிக்கு செத்துப்போன தீவிரவாதி இங்கே உசுரோட இருக்கிறதை ஹீரோ பாக்க ஒரு கலகலப்பான, சாரி., கலகலத்துப்போன க்ளைமேக்ஸ்.

சாம்பிளுக்கு ஒரு சீன்.
பாலைவனம் வழியா ஹீரோவும், ஹீரோயினும் தப்பிக்கும்போது அதோ எல்லைன்னு கை காட்டினா, அங்கே யாருமே இல்லாத ஒரு குட்டி முள்வேலியில பார்டர்னு எழுதி ஒரு உடைஞ்ச போர்டை மாட்டி வெச்சிருக்காங்க.
தியேட்டரே கைதட்டி கூச்சலிட்டதுன்னு சொன்னா அது மிகையில்லை. ஆனா, அது மிகையான மொக்கையைப் பார்த்ததால்னு அனுபவிச்சாத்தான் புரியும்.

மொத்தத்தில் யான் வரலாற்றில் பொன்னெழுத்துக்களில் பொறித்து வைக்கப்படவேண்டிய ஒரு படம் – எப்படி ஒரு படம் எப்படி எடுக்கக்கூடாதுங்கிறதுக்கு உதாரணமா!!

Hariharan Venkatraman