September 18, 2021

மோடி வாழ்த்து – ஆப்கானிஸ்தான் அணி

புதுடில்லி : முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டில் பங்கேற்கும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் ஆப்கானிஸ்தான் அணியில் விளையாடும் வீரர்களுக்கு எனது வாழ்த்துக்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போட்டியில் இந்தியாவுடன் விளையாட தேர்வு செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இரு அணிகளுக்கும் எனது வாழ்த்துக்கள். விளையாட்டுக்களால் எங்கள் மக்கள் உடனான பிணைப்பு மற்றும் பந்தத்தை பலப்படுத்துவதாக அமையட்டும் என குறிப்பிட்டுள்ளார்.