September 17, 2021

மோடி வளைகுடா விசிட் – சில உண்மைகள்!

மோடியின் இந்த ரீசண்ட் விசிட் 30 வருஷ வளைக்குடா மவுனத்தை உடைத்த பெருமை கொண்டது என்று சொன்னால் நம்பிதான் ஆக வேண்டும்.பர்மாவில் இருந்து சம்பாதித்த செல்வத்தை அடுத்து வந்த அந்நிய செலவாணி இந்த வளைகுடா இந்தியர்களின் வியர்வைத் துளி பணங்கள் தான். அதுவும் இன்று நேற்றல்ல கடந்த இரண்டு பத்து ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பணத்தை குமிக்கும் இந்த என் ஆர் ஐ இந்தியர்களின் திராம் / ரியாலை பெறுவதை தவிர வேறு எந்த உதவியையும் இந்திய அரசு அவர்களுக்கு செய்தது இல்லை.
modi uae
எதற்கு எடுத்தாலும் கடும் தண்டனை கொடுக்கும் இந்த வளைக்குடா நாடுகளில் ஏன் என்ன உண்மை என கேட்க நாதி கூட இல்லை. இந்தியர்கள் கூலிகள் அவ்வளவு தான் இந்த இந்திய‌ அரசுக்கு தெரிந்தது. அமெரிக்கா டாலரை விட பெரிய பணமா? என்றால் அத்தனை நாடுகளிலும் பணத்தை அங்கே வச்சு அங்கேயே குடியுரிமை கொடுத்து அந்த நாட்டின் அடிமை ஆக்கிடுவாங்க.

ஆனா வளைகுடாவில் எத்தனை ஜென்மம் இருந்தாலும் இரண்டு வருஷத்துக்கு ஒரு முறை ரெஸிடென்ஸை புதுப்பிக்க முடியுமே தவிர தப்பி தவறி கூட வளைகுடாவாசி ஆகவே முடியாது. அப்படி ஒன்று இருக்க கடந்த 5 ஆண்டுகளில் ஈடிஏ / எம்மார் / எட்டிஹாட் / எமிரேட்ஸ் என பல முதல் நிலை கம்பெனிகள் இந்தியாவில் இன்வெஸ்மென்ட் செய்ய மோடியின் இந்த பயணம் இந்த நாட்டின் சார்பாக ஒரு மதிப்பை வளைகுடாவில் கொடுக்கும். எரிபொருள் / எல்பிஜி இறக்குமதிக்கு வழி வகுக்கும்.

அது மட்டுமல்ல தாவூத்தை நெருங்க நெருக்க இது ஒரு ராஜதந்திரம் கூட. 26 லட்சம் பேர் வசிக்கும் இந்த வளை குடாவில் இன்று மோடி பேச்சை 40,000 பேர் கிரிக்கட் மைதானத்திலும் 15,000 பேர் எல்லா முக்கிய ரெஸ்டா ரென்ட்டிலும் கேட்கப் பெறுவார்கள். இந்த பயணத்தையும் கலாய்க்க ஒரு கும்பல் இருப்பதால் மிச்சத்தை நீங்களே பார்த்து கொள்ளுங்கள் அதற்கு முன் இந்தியாவில் இருந்து அரசியல்வாதியாய் அதிகம் அந்நிய நாட்டுக்கு ஒரு வருடத்தில் பயணித்தவர் மோடி அல்ல / பிரனாப்பும் அல்ல – உம்மன் சான்டி என்னும் கேரள முதல்வர் தான் என்ற உண்மை எத்தனை பேருக்கும் தெரியும்???!

Modi’s 3 Decade Ice-Breaking with UAE.