October 22, 2021

மோடி ரேடியோ ஸ்பீச்சை கேட்கணுமா? 81908 81908 என்ற எண்ணுக்கு ‘மிஸ்டு கால்’ கொடுங்க!

பிரதமர் நரேந்திர மோடி. ‘மான் கீ பாத்’ (மனதிலிருந்து பேசுகிறேன்) என்ற நிகழ்ச்சி மூலம் ஒவ்வொரு மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார் இந்த ஆண்டுக்கான முதல் நிகழ்ச்சியில் இன்று மோடி பேசுகையில், இந்த உரையை நாட்டு மக்களுக்காக உயிர்நீத்த தியாகிகளுக்கு அர்ப்பணிப்பதாக கூறினார்.மேலும் மான் கீ பாத் நிகழ்ச்சியை கைப்பேசிகளிலும் கேட்கும் வகையில் தொழில்நுட்ப வசதி செய்யப்பட்டுள்ளது. 81908 81908 என்ற எண்ணுக்கு ‘மிஸ்டு கால்’ கொடுப்பதன் மூலம் நிகழ்ச்சியை கேட்கலாம் என மோடி தெரிவித்தார்.
modi jan 31
மேலும் அவர் பேசும் போது, “நேற்று நான் ராஜ்காட் சென்றேன், தியாகிகளை நினைவுகூரும் மற்றும் அவர்களை கவுரவிக்கும் நாளாக ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது. தியாகிகளை நாம் போற்றுவதில் இருந்து விலக கூடாது . தியாகிகள் என்றும் போற்றுதலுக்குரியவர்கள். சர்தார் பட்டேல் எழுதிய புத்தகம் படித்தேன் , அதில் அவர் காதி கதர் துணிகளுக்கு எவ்வித முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது எனது மனதை மிக நேர்த்தியாக தொட்டது. தற்போது மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கையால் காதி இளைஞர் களையும் கவர துவங்கியிருக்கிறது, இந்திய சுதந்திரத்தின் சின்னமாக காதி விளங்குகிறது . காதி பலருக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் களமாக திகழ்கிறது. எனவே மீண்டும் ஒரு முறை கேட்டு கொள்கிறேன் காதிக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

பயங்கரவாத அச்சுறுத்தலையும் தாண்டி சமீபத்தில் குடியரசு தினத்தை நாம் சிறப்பாக கொண்டாடி முடித்துள்ளோம் , சோலார் சக்தியும் பயன்படுத்தும் விதம் பெருக வேண்டும் . பல தரப்பில் இருந்து சோலார் சக்ரா பயன்பாடு குறித்து எனக்கு கடிதம் எழுதி வருகின்றனர் . சோலார் மூலம் ஸ்பின்னிங் மில் செயல்பாடு குறித்து பலரும் பயன் பெற்று வருவது சோலார் வெற்றிக்கு ஒரு உதாரணம் ஆகும் .

நமது நாட்டில் விவசாயிகளின் பெயரால் நிறைய பேசப்படுகிறது. ஆனால் விவசாயிகள் பெரிய நெருக்கடி நிலையை சந்தித்து வருகின்றனர், நான் அந்த விவாதத்தில் செல்ல விரும்பவில்லை. இயற்கை சீற்றங்களில் விவசாயிகளின் அத்தனை உழைப்பும் வீணாகிறது. அவரது ஓராண்டு உழைப்பு விரயமாகிறது. அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க ஒன்று மட்டுமே நமக்கு உள்ளது அதுதான் பயிர்க் காப்பீட்டுத் திட்டம். 2016-ம் ஆண்டில் மத்திய அரசு விவசாயிகளுக்கு பெரிய பரிசை அளித்துள்ளது. பயிர்க்காப்பீட்டுத் திட்டம் பிரதமரை புகழ்பாடுவதற்காக கொண்டு வரப்பட திட்டமல்ல.

எத்தனையோ ஆண்டுகள் பயிர்க்காப்பீடு பற்றி பேசியுள்ளோம், ஆனால் 20 அல்லது 25% விவசாயிகளுக்கு மேல் அதனால் பயனடையவில்லை. எனவே 2 ஆண்டுகளில் குறைந்தது 50% விவசாயி கள் இத்திட்டத்தில் இணைய வேண்டும் என்பதை இலக்காகக் கொள்ள உறுதி எடுத்துக் கொள்வோமா? உங்களிடமிருந்து இந்த உதவியை எதிர்பார்க்கிறேன். ஏனெனில், விவசாயிகள் இத் திட்டத்தில் இணைந்தால், இயற்கைச் சீற்ற பாதிப்புகளில் அவர்களுக்கு பெரும் உதவிகரமாக இருக்கும்

இந்த முறை இத்திட்டம் பெருமளவுக்கு ஏற்றுக் கொள்ளப்படும் காரணம், தொழில்நுட்பம் காரணமாக இது பலருக்கும் எளிதாக அணுகமுடியக் கூடியதாக இருக்கும். இதுமட்டுமல்ல, பயிரிட்ட 15 நாட்களில் பயிருக்கு சேதம் ஏற்பட்டாலும் கூட பயிர்க் காப்பீட்டுத் திட்டம் உதவும். தொழில்நுட்ப உதவி காரணமாக சேதம் உடனடியாக கணக்கிடப்பட்டு இழப்பீடும் உடனடியாக வழங்க முடியும். மேலும் முக்கியமென்னவெனில் இதற்கான பிரிமியம் தொகை மிகவும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரி குறைந்த பிரிமியத்தை ஒருவரும் கற்பனை செய்து பார்க்க முடியாது. காரிப் பயிர்களுக்கு பிரிமிய விகிதம் 2% என்றும், ராபி பயிர்கலுக்கு 1.5% என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்போது கூறுங்கள் இந்தத் திட்டத்திலிருந்து பயனடையாத விவசாயிகள் இருக்க முடியுமா? எனவே இத்திட்டம் பற்றிய விழிப்புணர்வு பரவ வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார் மோடி.