September 17, 2021

மோடி பெயரில் இலவச மிக்சர் பாக்கெட் – அமெரிக்காவில் சப்ளை

அமெரிக்காவில் தீபாவளிக்கு இனிப்பு பேடா, குலாப்ஜாமூன் வாங்கியவர்களுக்கு இலவசமாக ஒரு இனிப்பு, காரம் கலந்த நறுமண சுவையுடன் மிக்சர் பாக்கெட் தரப்பட்டது. அதன் பெயர் என்ன தெரியுமா? மோடி மேஜிக் ‘ நம்கீன் மிக்ஸ்
nov 4 narendramodi-magic.
அமெரிக்காவில் நியூயார்க், நியூஜெர்சி உட்பட பல இடங்களில் உள்ள இனிப்பு கடை ராஜ்போக் ஸ்வீட்ஸ். இதை நடத்தி வருபவர் குஜராத்தில் இருந்து அமெரிக்கா போன அரவிந்த் படேல் குடும்பம். இவர் இந்த பிசினசை பரப்பி பல கோடிகளை அள்ளி வருகிறார். இவர் பாஜ கட்சியின் தீவிர தொண்டர். மோடிக்காக அவ்வப்போது குஜராத் சென்று பிரசாரம் செய்து வந்துள்ளார்.

இதற்கிடையில் அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள், இந்திய அரசியல் கட்சிகளுக்கு நேரடியாக பணம் நன்கொடை தர முடியாது. அதற்கு ஏகப்பட்ட விதிகள் உள்ளன. அதே சமயம், அமெரிக்காவில் பிரசாரமும் செய்ய முடியாது.

இந்த நிலையில், இவர் புதுமையான வழிகளில் மோடிக்கு அவ்வப்போது மறைமுக வழிகளில் பிரசாரம் செய்து வருகிறார். கடந்த முறை மோடி 11 வது ஆண்டாக முதல்வர் பதவியில் நீடிப்பதை கொண்டாட, தன் கடையில் ஸ்வீட் பாக்கெட் வாங்குவோருக்கு 11 பேடாக்கள் அடங்கிய பாக்கெட்டை இலவசமாக தந்தார். இப்போது மோடி மேஜிக் என்ற பெயரில் நறுமண மிக்சர் பாக்கெட்டை தீபாவளியை ஒட்டி தந்துள்ளார்.

இவர்களில் பெரும்பாலோர் மோடி அபிமானிகள் என்பதால் அவர்களுக்கு பெருத்த சந்தோஷம். ஒரு பாக்கெட் செலவு 45 சென்ட். 10 லட்சம் பாக்கெட்கள். மொத்த செலவு 45 ஆயிரம் டாலர். மோடிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய 6 மாதம் அரவிந்த் படேல் இந்தியா வர உள்ளார். அவருடன் 20க்கு மேற்பட்டோர் வர உள்ளனர் என்பது அடிசினல் தகவல்.

This Diwali, ‘Modi Magic’ hits America.
*******************************************************
In the midst of gulab jamuns and naan khatai this Diwali, a new flavour is popping up in a food chain across America – ‘Modi Magic’, a namkeen mix inspired by Narendra Modi.