October 19, 2021

“மோடி என்ன செய்தார்?” – ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தை தொடக்கிய மோடி ஸ்பீச்

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் பொருட்டு ஸ்டார்ட்அப் இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி அது குறித்த திட்ட அறிக்கையை வெளியிட்டார். “தொடங்கிடு இந்தியா (‘ஸ்டார்ட் அப் இந்தியா), எழுந்து நில் இந்தியா (ஸ்டாண்ட் அப் இந்தியா’)” என்ற இரண்டு தொலை நோக்குத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி அறிமுகப்படுத்தினார். இத னையடுத்து, கடந்த மாதம் மான் கீ பாத் வானொலி உரையில் பேசிய பிரதமர் மோடி, ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் ஜனவரி மாதம் 16ம் தேதி (இன்று) துவங்கப்பட உள்ளதாக தெரிவித்தார். இந்த திட்டத் தின்படி தொழில்துறையில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் கடன் வசதிகள், தொழில் முனைவோருக்கான உதவிகள், புதிய தொழில் வாய்ப்புகள் மற்றும் ஆய்வுகளுக்கான நிதி உதவி உள்ளிட்டவற்றை உருவாக்கி தர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிமுக நிகழ்ச்சி டெல்லியில் உள்ள விஞ்ஞாபவனில் இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு இளம் தொழில் முனைவோர்கள், பன்னாட்டு நிறுவனங்களின் சிஇஓக்கள் கலந்து கொண்டனர்.
stratindia jan 16
டெல்லியில் ஸ்டார்ட் அப் இந்தியா மாநாட்டை இன்று துவக்கி வைத்த பிரதமர் மோடி பேசுகையில், “புகழ் பெறுவதற்காகவும் பணம் சம்பாதிப்பதற்காகவும் இந்த திட்டம் துவங்கப்படவில்லை. இந்த திட்டத்தின் நோக்கம் இதற்கு அப்பாற்பட்டது. மாற்றமே இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக உள்ளது. அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு ஒரு ஆப்ஸ்களில் கிடைக்கிறது. இதனை நான் உணர்ந் துள்ளேன். நானும் நரேந்திரமோடி ஆப் என ஒன்றை வைத்துள்ளேன் .இதில் முக்கிய தகவல்கள் மக்களுக்கு பகிரப்பட்டுள்ளது. உங்களின் அனுபவங்களை இதில் பகிர்ந்து கொள்ளலாம். விவசாயி களுக்கு உதவும் வகையிலான ஆப்களை கண்டுபிடிக்க வேண்டும். ஆப்ஸ்களும் ஸ்டார்ட் அப் குடிசை தொழில்போல உதவ வேண்டும். இந்த நாட்டின் இளைஞர்களுக்கு மோடி என்ன செய்தார் செய்ய வில்லை என்பது முக்கியமல்ல. திறமையான ஆற்றல் மிக்கவர்கள் இங்கு உள்ளனர். அவர்கள் வெற்றி பெற அரசு உதவ வேண்டும். சுகாதாரத்துறையில் பல தொழில்நுட்பங்கள் வந்துள்ளன. அது ஏழை களுக்கு கிடைக்க வேண்டும். ஸ்டார்ட் ஆப் இந்தியா என கூறும்போது அதில் ஸ்டான்ட் அப் எனவும் அர்த்தம் வருகிறது

இங்குள்ள சிவபபு நாடா முறையை ஒழிப்பது தான் எனது நிர்வாக பாணி. இந்தியாவின் எண்ண ஓட் டத்தை மாற்றுவோம். வரி சீரமைப்பில் வெளிப்படைத் தன்மை இருக்கும். தொழிலதிபர்கள் தங்களின் கருத்துக்களையும், எண்ணங்களையும் கூறலாம். இங்கு கூடியுள்ள நீங்கள் தான் என்ன செய்யக் கூடாது என கூற வேண்டும்.பல எண்ணங்கள் நமக்கு கிடைக்கிறது. சிலர் அதை பாதியில் விட்டு விடுகின்றனர். சிலர் அதனை முழுமையாக நிறைவேற்றுகின்றனர். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் பெரிய தாக்கம்ஏற்பட்டுள்ளது. ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்திற்கு, குறைந்த அரசு, அதிக நிர்வாகம் தான் முக்கிய பங்காக இருக்கும்.

தீர்வுகளுக்கும், பல எண்ணங்களுக்கும் இந்த திட்டம் தூண்டுகோளாக இருக்கும். நாட்டில் மாற்றங் களை ஏற்படுத்த அரசு உறுதி பூண்டுள்ளது. ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம், இந்தியாவில் உள்ள இளைஞர்களின் திறமையைக் கொண்டாடும். துணிச்சலான முயற்சிகள் தான் ஸ்டார்ட் ஆப் திட்டத் திற்கு வெற்றி கிடைக்க வழி வகுக்கும். இங்கு இருக்கும் உங்களுக்கு இருக்கும் திறமை எனக்கும் கிடைக்க வேண்டும் என கடவுளிடம் வேண்டியதுண்டு. கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் மாற்றங்களும் தீர்வுகளும் கண்டுள்ளோம். பல முன்னேறிய பெரும்பாலான நாடுகளின் பயன்படுத்தப் படும் தடுப்பூசிகள் இந்திய மருத்துவர்கள் கண்டுபிடித்தது. தொழிலதிபர்கள் எடுக்கும் துணிச்சலான முடிவு தான் அவர்கள் வெற்றி பெற உதவுகிறது” என பேசினார்.