September 18, 2021

”மோடியை முன்னிலைப்படுத்தும் மீடியாக்களுக்கு ஜெயில்”: கெஜ்ரிவால் ஆவேசம்!

”ஆம் ஆத்மி கட்சி அதிகாரத்துக்கு வந்தால், நரேந்திர மோடிக்கு ஆதரவாக செயல்பட்ட ஊடகவியலாளர்கள் மீது விசாரணை கமிஷன் அமைத்து விசாரணை நடத்தப்படும். மோடி ஆதரவு ஊடகவியலாளர்கள் சிறையில் அடைக்கப்படுவர். மோடியை முன்னிலைப்படுத்துவதற்கு பாஜகவிடம் இருந்து டிவி சேனல்களுக்கு மிகப் பெரிய தொகை வழங்கப்பட்டுள்ளது” என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.இது குறித்து மின்னனு ஊடக ஆசிரியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள செய்தியில், பாஜக உட்பட அனைத்து கட்சிகளையும் சமமாகவே பாவிப்பதாகவும் வேறுபாடு காட்டுவதில்லை என்றும்,அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த கருத்து அவரது பொறுப்பற்ற தன்மையை காட்டுவதாகவும் மின்னனு ஊடக ஆசிரியர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
kejriwal and media
நாக்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கெஜ்ரிவால், பாஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியிடம் ஊடகங்கள் விலை போய்விட்டதாக குற்றம்சாட்டியிருந்தார்.இப்படி திடீரென்று இந்திய ஊடகங்கள் விலை போய்விட்டன என கேஜ்ரிவால் பேசிய காட்சி தொலைக்காட்சி சேனல் ஒன்றில் தொடர்ந்து ஒளிபரப்பானது.சமீப்கால்மாக அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வரும் கெஜ்ரிவாலின் இந்த ஆவேச பேச்சு அரசியல் வட்டாரத்தில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கெஜ்ரிவால் தனது உரையில்,””கடந்த ஓராண்டாக ஊடகங்கள் மோடி புகழ்பாடுகின்றன. குஜராத்தில் ராம ராஜ்யம் நடப்பதாகவும் ஊழல் அழிந்துவிட்டதாகவும் கூறுகின்றன. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் குஜராத்தில் 800 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இது பற்றி எந்த தொலைக்காட்சியிலும் செய்தி வரவில்லை. மாறாக மோடி புகழ் பாடுவதற்கு காரணம், நரேந்திர மோடியிடம் ஊடகங்கள் விலை போய்விட்டதே ஆகும்.ஆம் ஆத்மி கட்சி அதிகாரத்துக்கு வந்தால், நரேந்திர மோடிக்கு ஆதரவாக செயல்பட்ட ஊடகவியலாளர்கள் மீது விசாரணை கமிஷன் அமைத்து விசாரணை நடத்தப்படும். மோடி ஆதரவு ஊடகவியலாளர்கள் சிறையில் அடைக்கப்படுவர். மோடியை முன்னிலைப்படுத்துவதற்கு பாஜகவிடம் இருந்து டிவி சேனல்களுக்கு மிகப் பெரிய தொகை வழங்கப்பட்டுள்ளது” என்று அவர் பேசியிருந்தார்.

இந்நிலையில், ஊடகவியலாளர்கள் குறித்த பேச்சு பற்றி கெஜ்ரிவாலிடம் செய்தியாளர்கள் இது குறித்து இன்று கேட்டபோது, தன் மீதான குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்ததோடு, “ஊடகவியலாளர்களை நான் எப்படிப் பகைத்துக் கொள்வேன?” என கேள்வி எழுப்பினார்.இதற்கிடையில் கெஜ்ரிவாலின் இந்த சர்ச்சை கருத்துக்கு பாஜக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.மேலும் இது குறித்து மின்னனு ஊடக ஆசிரியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள செய்தியில், பாஜக உட்பட அனைத்து கட்சிகளையும் சமமாகவே பாவிப்பதாகவும் வேறுபாடு காட்டுவதில்லை என்றும்,அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த கருத்து அவரது பொறுப்பற்ற தன்மையை காட்டுவதாகவும் மின்னனு ஊடக ஆசிரியர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

AAP chief Arvind Kejriwal threatens to ‘jail’ media; says TV channels have been ‘paid’ by Modi
********************************************************************************************************************
Aam Aadmi Party (AAP) chief Arvind Kejriwal on Friday found himself in another controversy, when he was seen on a news channel saying that media has been paid ‘heavy amounts’ by BJP’s Prime Ministerial candidate Narendra Modi and should be ‘jailed’.