September 25, 2021

மோடியின் ஓராண்டு ஆட்சிக்கு பூஜ்யம் மதிப்பெண்! – ராகுல் மீது பா.ஜ.க. காட்டம்!

மத்தியில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்று விட்டது. இந்த ஓராண்டில் மத்திய அரசின் செயல்பாடு குறித்து காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘விவசாயிகள் பிரச்சினைகள் உள்ளிட்ட விவகாரங்களை கையாளுவதில் மோடி அரசுக்கு 10–க்கு பூஜ்யம் மதிப்பெண் தான் வழங்க முடியும்’ என்று கூறியிருந்தார்.
modi 1 yr
ராகுலின் இந்த கருத்துக்கு பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர்ம்”மோடியின் சிறப்பான செயல்பாடுகளுக்காக ஒட்டுமொத்த உலகமே அவரை மிகப்பெரும் தலைவர் என புகழ்கிறது. இந்த ஓராண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் அதிகரிப்பு, பணவீக்கம் குறைப்பு என நாடு முன்னேறி வருகிறது.

ஆனால் நீங்கள் (ராகுல்) பூஜ்யம் என கூறுகிறீர்கள். பூஜ்யங்களுக்கு, பூஜ்யத்துக்கு அப்பால் எதுவும் தெரியாது. ஜீரோக்களால், ஹீரோக்களை ஏற்றுக்கொள்ள முடியாது.ராகுல் காந்தி 11 ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டுள்ளார். ஆனால் என்ன நடந்தது? காங்கிரஸ் கட்சி 8 மாநிலங்களை இழந்தது. அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி அந்தஸ்தையும் அது இழந்து விட்டது. அவர்களின் தோல்வியை மறைக்க அரசு மீது மலிவான குற்றச்சாட்டுகளை கூறி ஆவேசமாக பேசி வருகிறார்கள்” என்று குறிப்பிட்டார்.