September 20, 2021

மோடிக்கு 3 அடுக்கு பாதுகாப்பு: மத்திய அரசு முடிவு

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ, காலிஸ்தான் தீவிரவாதிகளை பயன்படுத்தி பாஜ பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியை கொல்ல சதித் திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய அரசை உளவுத் துறை(ஐ.பி.) எச்சரித்துள்ளது.முன்னதாக் மோடி சமீபத்தில் பாட்னாவில் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பாதுகாப்புக் குறைபாடு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு 3 அடுக்கு பாதுகாப்பை வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளது. இதில் வெளிப்புற அடுக்கிற்கான பாதுகாப்பை குஜராத் மாநில போலீஸார் வழங்குவார்கள்.
nov 5 modi
மோடியைச் சந்திக்க விரும்பும் நபர்களைக் கையாள்வதும் அவர்களின் பொறுப்பாகும். அந்த நபர்களின் பெயர்ப் பட்டியல் எடுக்கப்பட்டு அவர்களின் புகைப்படங்களையும் பாதுகாப்பு அமைப்பினர் முன்கூட்டியே எடுத்துக் கொள்வார்கள். அந்த நபர்கள் மோடியைச் சந்திப்பதற்கு வண்ண அடையாள அட்டைகள் வழங்கப்படும்.

இரண்டாவது அடுக்குப் பாதுகாப்பை குஜராத் காவல்துறையின் கமாண்டோ வீரர்கள் வழங்குவார்கள். பாட்னாவில் மோடி பங்கேற்ற கூட்டத்தில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததைத் தொடர்ந்து, இனி அவர் பங்கேற்கும் பகுதியில் வெடிகுண்டு இருக்கிறதா என்பதைக் கண்டறியும் பணியில் தங்கள் தொழில்நுட்பக் குழுவை குஜராத் கமாண்டோக்கள் ஈடுபடுத்துவார்கள்.

பாட்னாவில் குண்டு வெடிப்பு நடைபெற்ற இடம் வெடிகுண்டு உள்ளதா என்ற சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. எனவே, இனி வரும் கூட்டங்களில் நிலக்கண்ணிவெடி உள்ளிட்ட குண்டுகள் இருக்கின்றனவா என்ற சோதனையை குஜராத் போலீஸாரை மேற்கொள்ள வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சோதனையானது மூன்று முறை நடத்தப்படும். பொதுக்கூட்டம் நடைபெறுவதற்கு முந்தைய இரவு, கூட்டம் நடக்கும் தினத்தின் காலையிலும் சோதனை நடைபெறும். மூன்றாவது சோதனை, மோடி பொதுக்கூட்டத்துக்கு வருவதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்பு மோப்ப நாய்களின் உதவியுடன் நடத்தப்படும்.

மோடிக்கு அளிக்கப்படும் மூன்று அடுக்குப் பாதுகாப்பை என்எஸ்ஜி எனப்படும் தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 36 கமாண்டோ வீரர்களும் குஜராத் காவல்துறை கமாண்டோக்களும் அளிப்பார்கள். மோடிக்கான உள்வட்டப் பாதுகாப்பை இப்போது 18 என்எஸ்ஜி கமாண்டோக்கள் அளித்து வருகின்றனர். அவருக்கு உள்ள பயங்கரவாத அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு இது 36ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Security forces throw rings of protection around Modi
***************************************************************************
Indian security forces are preparing for one of their most challenging assignments in decades, protecting prime ministerial candidate Narendra Modi in a country with a grim history of political assassinations.