October 16, 2021

மோடிக்கு கோவில் கட்டி தினந்தோறும் வழிபாடு!

காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு தெலுங்கானா பகுதி காங்கிரஸ் தலைவர்கள் ஆந்திராவில் கோவில் கட்டி தினமும் வழிபாடு நடத்தி வருவதுடன் அந்த தெலுங்கானா மசோதா சட்டமாக மாறியதும் இதே இடத்தில் நிரந்தரமாக கோயில் கட்ட முடிவு செய்துள்ள செய்தியின் சூடு ஆறும் முன்பாக பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடிக்கு, உ.பி., கோவிலில், சிலை அமைக்கப்பட்டு, தினமும் ஏராளமானோர் வணங்கி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
jan 30 MODI TEMPLE
சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான உ.பி.,யின் கவுஷாம்பி மாவட்டத்தில் உள்ளது பகவான்பூர் கிராமம். இங்குள்ள பழமையான சிவன் கோவிலில் தான் நரேந்திர மோடிக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது.அந்த கோவில் பிரகாரத்தின் ஒரு பகுதியில் மோடி அமர்ந்திருப்பது போல் நான்கடி உயரத்திற்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிலைக்கு மோடி போல் தாடியும் உடைகளும் அணிவிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து தினமும் ஏராளமான, பா.ஜ.,வினரும், மோடி ஆதரவாளர்களும் அந்த கோவிலுக்கு வந்து ‘மோடி சாலிசா’ எனப்படும் மோடி புகழ் மந்திரங்களை பாடுகின்றனர். சிலர் மலர் மாலைகள் சூட்டி வணங்கவும் செய்கின்றனர்.மேலும் அந்தக் கோவிலின் அர்ச்சகர் பிரிஜேந்திர நாராயண் மிஸ்ரா மோடி போலவே உடையணிந்து பூஜை மேற்கொள்கிறார். மோடி சிலை அருகே 24 மணி நேரமும் விளக்கு ஏற்றப்பட்டுள்ளது.இந்த தகவல் சமீபத்தில் தான் பிற பகுதியினருக்கு தெரிய வந்தது. எனவே சமீபகால்மாக ஏராளமானோர் இந்த கோவிலுக்கு வந்து மோடியை தரிசித்து செல்கின்றனர்.இதற்கிடையில் காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு தெலுங்கானா பகுதி காங்கிரஸ் தலைவர்கள் ஆந்திராவில் கோவில் கட்டி தினமும் வழிபாடு நடத்தி வருவதுடன் அந்த தெலுங்கானா மசோதா சட்டமாக மாறியதும் இதே இடத்தில் நிரந்தரமாக கோயில் கட்ட முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்க்து

Now, a temple for Narendra Modi
************************************************
BJP’s Prime Ministerial candidate Narendra Modi may or may not enter Parliament as leader of the House but he has definitely entered the hearts of the people in Uttar Pradesh.
In Kaushambhi district, the ‘Modi mania’ has reached such proportions that a local Shiva temple in Bhagwanpur village has been converted into a Modi temple.