September 29, 2021

மோசடியான குறுஞ்செய்தி மூலம் இன்வெஸ்ட்மெண்ட் நடப்பதைத் தடுக்க செபி பிளான்!

குறுஞ்செய்தி, வாட்ஸ்ஆப், சமூக வலைதளங்கள் மூலம் நடக்கும் மோசடிகளை தடுக்க செபி திட்டமிட்டு வருகிறது. இதற்காக தொலைத்தொடர்பு நிறுவனங்கள், வங்கிகளின் உதவியை செபி கோரி இருக்கிறது. மேலும் முதலீட்டாளர்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சியை செபி தொடர்ந்து ஏற்பாடு செய்து வருகிறது. அது மட்டுமின்றி ”குறுஞ்செய்தி மூலம் வரும் தகவலைகளை வைத்து சிறு முதலீட்டாளர்கள் வர்த்தகம் செய்ய வேண்டாம என்றும் செபியால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவ னங்கள் மற்றும் முதலீட்டு ஆலோசர்களிடம் மட்டுமே வர்த்தகம் செய்ய வேண்டும்”என்று செபி அறிவுறுத்தியுள்ளது.
invest sep 28
”பதிவு செய்யப்பட்டாத பல நிறுவனங்கள் குறுஞ்செய்தி மூலம் பல தவறான தகவல்களை முதலீட்டாளர்களுக்கு அனுப்பி, அந்த பங்குகளில் முதலீடு செய்ய வைக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. எளிதில் ஏமாறும் வாய்ப்புள்ள முதலீட்டாளர்களுக்கு குறுச் செய்தி மூலம் தவறான தகவலை அனுப்பி வங்கி கணக்கு கொடுத்து அதில் பணத்தை டெபாசிட் செய்ய சொல்கின்றனர். ஏதுமறியா முதலீட்டாளர்கள் இப்படி பணத்தை தொலைக்கிறார்கள். மோசடி நபர்களை கண்டுபிடிக்க மொபைல் நிறுவனங்கள், இணையதள சேவையை வழங்குபவர்கள் வங்கி உள்ளிட்ட பல அமைப்பு களில் செபி கேட்டிருக்கிறது. பல நிறுவனங்களுக்கு எங்களது கோரிக்கைகள் சரியான சமயத்தில் சென்றுவிட்டது. இந்த விஷயத்தில் வங்கிகள் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள். ஆனால் சில டெலிகாம் நிறுவனங்கள் எங்களது கோரிக்கைக்கு பதில் அளிக்காமல் உள்ளன. இது சில காலத்துக்கு கிடப்பில் போடப் படும்பட்சத்தில் தொலைத் தொடர்பு துறை அமைச்சகத்தை அணுக வேண்டி இருக்கும்” என்று செபி அதிகார வட்டம் தெரிவித்துள்ளது