September 20, 2021

மொபைல் ஆப்ஸ் மூலம் டிரெய்லர்,பாடல்கள் வெளியீடு!

மக்கள் பாசறை வழங்கும் ஆர்.கே.நடிக்கும் படம் ‘என்வழி தனி வழி’ இப்படத்தை ஷாஜி கைலாஸ் இயக்கியுள்ளார். இசை ஸ்ரீகாந்த் தேவா. பாடல்கள் வைரமுத்து, இளையகம்பன். படத்தின் இசையை இளையதளபதி விஜய் சம்பிரதாயமான முறையில் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து இப்படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் போன்றவை புது தொழில்நுட்பத்தில் வெளியிடப்பட்டன. . இந்த முறையில் இந்தியாவிலேயே முதல் முயற்சி ‘என் வழி தனி வழி’ படம்தான்.

விஜய் ஆடியோவை வெளியிட்டதைத் தொடர்ந்து ஆர்.கே.வி ஸ்டுடியோவில் படத்தின் அறிமுகவிழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கதாநாயக நடிகர் ஆர்கே பேசும் போது ” இந்த ஆடியோ ட்ரெய்லர் வெளியீட்டை வேறு மாதிரி புதிய வழியில் செய்ய ஆசைப்பட்டேன்.வருங்காலம் இனி தொழில்நுட்பத்தின் கையில்தான். வருங்காலம் இனி மீடியா கையில்தான். எனவேதான் இம் முயற்சியை செய்துள்ளோம்.இப்படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் போன்றவற்றை ரசிகர்கள் எவரும் இருந்த இடத்திலிருந்து பார்க்கும் கேட்கும் வகையில் புது தொழில்நுட்பத்தில் வெளியிட்டுள்ளோம்.

இதன்படி படத்தின் விளம்பரத்தையோ,போஸ்டரையோ மொபைல் போனில் க்ளிக் செய்தால் போதும் பாடல்களைக் கேட்கலாம். ட்ரெய்லரைப் பார்க்கலாம்.இனி யாருடைய விவரம் தேவை என்றாலும் அவர் முகத்தை மொபைலில் ஒரு போட்டோ எடுத்தால் போதும். ,ஒரு புகைப்படத்தை வைத்தே எல்லாவிவரமும் கிடைக்கும். இதுதான் லேட்டஸ்ட் தொழில்நுட்பம்.இந்த ஆடியோ வெளியீட்டை விமானத்தில் பறந்தபடியே வெளியிட எண்ணினேன். ஆனால் அதையும் தாண்டி இதைக் கொண்டு சேர்க்கும் மீடியா முன் அறிமுகம் செய்யவே இங்கு வருவதாக முடிவு செய்தேன்.

இதை இந்தியாவிலேயே முதன் முதலில் அறிமுகம் செய்ததற் காக பெருமைப்படுகிறேன். ‘என் வழி தனி வழி’ இது ஒரு போலீஸ் அதிகாரி பற்றிய விறுவிறு கதை.இப்படம் ஜனவரி 23ல் வெளியாகிறது. படத்தில் பாடல்களுக்கு எனக்கு ஆட வரவில்லைதான்.சுமாராக ஆடியுள்ளேன். ஆட ஆட வருமென்று நம்புகிறேன்.

2015–ல் மூன்று படங்கள் தயாரிக்க முடிவு செய்துள்ளேன். இதே படக்குழுவைக் கொண்டுஅடுத்து ‘வைகை எக்ஸ்பிரஸ்’ என்கிற படம் எடுக்க இருக்கிறோம். பிப்ரவரியில் படப்பிடிப்புக்குச் செல்கிறோம். இந்த’என் வழி தனி வழி’படம் எங்கள் முந்தைய ‘எல்லாம் அவன் செயல்’ படத்தைப் போல பத்து மடங்கு நன்றாக வருமென்று நினைக்கிறேன். “இவ்வாறு ஆர்கே பேசினார்.