September 27, 2021

மொத்தத்தில் இந்த முத்தத்தால் ஏற்படும் சில நன்மைகளின் பட்டியல் இதோ:.

ஒவ்வொருவரின் அன்பையும், காதலையும் உணர்த்தும் ஒரே மொழி முத்தம். அந்த முத்தம் பல நல்ல விஷயங்களை செய்கிறது. பொதுவாக தம்பதியரிடையேயான செல்லச் சண்டைகளுக்கு சமாதானாத்தூதுவனும் முத்தம்தான் என்கின்றனர் அனுபவசாலிகள். மேலும் சரியான நேரத்தில் சரியான நபருக்கு கொடுக்கப்படும் முத்தம் தியானத்திற்கு ஒப்பானது முத்தம். ஒரு ஆழமான முத்தம் கொடுப்பதன் மூலம் ஆக்சிடோசின், என்டோர்ஃபின், டோபோமைனின், போன்ற ரசாய னங்கள் சுரக்கிறதாம்.இதனால் முத்தம் கொடுப்பவர் மீது காதலும் அன்பும் கன்னாபின்னாவென்று அதிகரிக்குமாம். வீட்டில் சின்னதாய் சண்டை என்றால் முகத்தை திருப்பிக் கொண்டு போவது சண்டையை அதிக மாக்கும். அதேசமயம் எதிர்பாரத நேரத்தில் நச் என்று ஒரு முத்தம் கொடுங் களேன். சண்டை போட்டவர் கூட சமாதானமாகப் போய்விடுவார். முன் விளையாட் டுக்களில் அதிகம் பயன்படுத்தப் படுவது முத்தம். ஆண்கள் உறவுக்கு முன்பாக அதிகமாய் முத்தமிடுகின்றனர். அதேசமயம் உறவு முடிந்து நன்றி கூறும் விதமாக ஆண் களை முத்தமழையால் நனைக்கின்றனர் பெண்கள்.இந்த முத்தம் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும், ஆழமாய் அழுத்தமாய் கொடுக்கும் முத்தம் மூலம் 23 கலோரிகள் காணாமல் போகும் என்கின்றனர் நிபுணர்கள்.
url
மேலும் அன்பின் வெளிப்பாடாக இருக்கும் முத்தம், ஆரோக்கியத்திற்கும் பெரும் பங்காற்றுகிறது அடுத்தடுத்து உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.. குறிப்பாக மனைவியின் ஆசை முத்தம் கணவரின் மன அழுத்தம், தொப்பை, சோர்வு போன்றவற்றை வெகுவாக குறைத்துவிடும் என்பது சிலரது கருத்து. ஆரம்ப காலத்தில் இருந்தே ஆய்வில் இருந்த முத்த வைத்தியத்தை, உண்மை என்று அறிவியல் ஆராய்ச்சிகள் நிரூபித்திருக்கின்றன. அது பற்றிய சிறு அலசல்…

முத்தங்களை இடமாற்றி கொள்வதால் என்ன பயன் என்று சுவிட்சர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டார்கள். அதில், இறுக்கி அணைத்து முத்தம் கொடுக்கும் தம்பதியர் உடலில், மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ‘கார்டிசோல்’ என்ற ஹார்மோன் சுரப்பு குறைவதை கண்டுபிடித்தார்கள். அதாவது, இறுக்கி அணைத்து முத்தம் கொடுப்பவர்கள் டென்ஷன் ஆக மாட்டார்கள் என்பதே இவர்களது ஆராய்ச்சியின் முடிவு. இதற்கு முன்னரும் பல ஆராய்ச்சி யாளர்கள் இதுபற்றி ஆராய்ந்துள்ளனர். இருப்பினும் சுவிஸ் ஆராய்ச்சியாளர்களின் முடிவுகளையே உலக அறிவியலாளர்கள் அதிகமாக ஏற்றுள்ளனர்.

மேலும், இவர்கள் திருமணம் முடிந்தவர்களுக்கும், திருமணம் ஆகாதவர் அழுத்தம் எந்த அளவில் இருக்கிறது என்ற கோணத்திலும் ஆராய்ச்சியை தொடர்ந்தார்கள். அப்போது, புதிதாக திருமணம் ஆனவர்கள் மன அழுத்தமில்லாமல் மகிழ்ச்சியுடன் இருப்பது தெரியவந்தது. இதற்கான காரணம் முத்தம் என்பதே அந்த ஆய்வின் முடிவு. திருமணம் ஆகி பிள்ளைகள் பிறந்த பிறகு, பெரும்பாலான கணவர்கள், மனைவியருக்கு முத்தங்களை பரிமாறி கொள்வதில்லையாம். அதனால் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்திற்கும் முத்தத்தையே காரணமாக்கி உள்ளனர்.

முத்தத்திற்கு பெண்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை, ஆண்கள் கொடுப்பது கிடையாது என்றும், சில கணவன்மார்கள் மனைவிக்கு முத்தமே கொடுப்பதில்லை என்றும் ஆராய்ச்சியின் முடிவில் கண்டறியப்பட்டுள்ளது. 66 சதவீதம் பேர் முத்தமிடும் போது கண்களை மூடிக்கொண்டும், மீதமுள்ளவர்கள்தான் திறந்தபடியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடியும் முத்தமிடுகிறார் களாம். ‘கூச்சத்தை தூண்டும் அளவிற்கு, இத்தகைய சதவிகித அளவுகள் தேவையா?’ என்று கேட்டவர்களுக்கு இதற்கான விடையை விளக்கி உள்ளனர். மனைவியை பார்த்தப்படி முத்தமிடு வதால் மனதில் காதல், அன்பை தவிர வேற எந்த எண்ணங்களும் தோன்றாதாம். இல்லையேல் முத்த சமயத்திலும் அலுவலக பணிகள் எண்ணத்தில் சிறகடிக்கும் என்பது இவர்களது ஆய்வின் முடிவாக உள்ளது.

மொத்தத்தில் இந்த முத்தத்தால் ஏற்படும் சில நன்மைகளின் பட்டியல் இதோ:.

* ஒரு முறை முத்தமிடுவதால் நம் முகத்தில் உள்ள 29 தசைகள் இயங்குகின்றன. இது முகப் பொலிவை தக்கவைத்து கொள்ள உதவும். 40 வயதிற்கு மேல் முகப்பொலிவுடன் இருக்க வாழ்க்கை துணையை முத்தமிட்டு தான் பாருங்களேன்.

* எந்த அளவுக்கு அதிகமாக முத்தம் கொடுக்கிறோமோ, அந்த அளவுக்கு முதுமையில் முகத்தில் சுருக்கம் வரும் நாட்கள் வெகுதூரத்திற்கு செல்கின்றன.

* ஒரு முறை முத்தமிடுவதால் 23 கலோரி சக்தி, நம் உடலில் எரிக்கப்படுகிறது. மேலும் பிரெஞ்சு முத்தமாக இருந்தால், 5 கலோரி வரை கூடுதலாக எரிக்கப்படுகிறதாம். குண்டாக இருப்பவர்கள் தொடர்ந்து ஒரு நிமிடம் வரை முத்தமிட்டால், உடலின் 36 கலோரி சக்தியை குறைக்க முடியுமாம். இதன்மூலம் அவர்களது அதிகப்படியான தொப்பையும் குறைய வாய்ப்பிருக்கிறதாம். வழக்கமான உடற்பயிற்சிகளுடன் முடிந்தவரை இதையும் தான் முயற்சித்து பாருங்களேன்.

* ஆர்ட்டிக் பனி பிரதேசங்களில் வசிக்கும் எக்ஸிமோக்கள், தங்களது மூக்கால் முத்தமிட்டுக் கொள்கிறார்களாம். இதழ் முத்தங்களுடன், மூக்கு முத்தங்களும் உலக வழக்கில் வந்துவிட்டது.

* வேலைக்கு செல்லும்போது மனைவியை முத்தமிட்டு செல்லும் கணவன்மார்கள், அவ்வாறு முத்தமிடாதவர்களைக் காட்டிலும் 5 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ்கிறார்களாம். இதற்கும் மன அழுத்தம், உடல் எடையை தான் காரணமாக அடுக்கியுள்ளனர்.