October 16, 2021

மைஸ்கேன் – இந்தியாவில் இன்று முதல் அதிகாரபூர்வ அறிமுகம்…!

மைஸ்கேன் என்னும் புது வகை கேட்ஜெட்டை நான் லான்ச் செய்வதில் பெருமை கொள்கிறேன். 2012 ஆம் ஆண்டு நானும் என் நண்பர்களும் மலேஷியாவின் லோ யாட் என்னும் ஐடி பொருட்களை விற்கும் மாலுக்கு செல்லும் போது இந்த மைஸ்கேனை கண்டேன். அதாவது மவுஸ் மாதிரி இருக்கும் இது ஒரு ஹை டெஃபனீஷன் ஸ்கேனர். சாதாரண ஸ்கேனர் செய்ய முடியாத வேலையை இந்த ஸ்கேனர் சட்டுனு செய்யும்.
ravi nov 11
1200 டிபிஐ ரெஷலூஷனில் ஸ்கேன் செய்ய இப்போதைக்கு 60 லட்சம் முதல் 1 அரை கோடி ஸ்கேனர் தான் செய்ய முடியும், அதை இந்த தம்மாதூன்டு ஸ்கேனர் செய்வதை வியப்புடன் பார்த்து வாங்கி அதை ஆராய்ச்சி செய்த போது தான் தெரிந்தது – அதில் நிறைய செய்ய முடியும் என்று. உடனே இதன் கண்டுப்பிடிப்பாளாரான “டாகூடா” என்னும் ஸ்விஸ் நிறுவனத்தை அணுகி இதில் இன்னும் நிறைய விஷயங்களை செய்ய முடியும் என கூற அப்படியா என கேட்டு கொண்டு இவர்கள் இதனை மேலும் மெருகேற்றும்படி ஒப்பன் சோர்ஸ் முறையில் மிடில்வேர் அப்ளிகேஷனை செய்யும்படி கூறினார்கள்.

இதே நேரத்தில் மலேஷியாவில் ஒர் நிறுவனம் இதை லைசென்ஸ் எடுத்து இதை மார்க்கெட்டிங் செய்ய சிரமபட்டது. காரணம் விலை மற்றூம் ஸ்கேனரை தவிர வேறு எதுவும் இல்லாததால், டாகூடா இந்த தகவலை இந்த மைஸ்கேன் நிறுவனத்துக்கு அற்விக்க இந்த நிறுவனம் என்னை தொடர்பு கொண்டு இதை நான் கூறிய மிடில்வேர் அப்ளிகேஷன்களை செய்ய கான்ட்ட்ரக்ட் செய்தது. உடனே இதை பன் மொழி இயக்கத்துக்கு கொண்டு வந்தது மட்டும் அல்லாமல் பல கூகுள் அப்ளிகேஷனை இதில் புகுத்தி உலகத்தின் முதல் எக்ஸெல் எனப்படும் ஸ்பெர்ட்ஷீட்டை கூட ஸ்கேன் செய்து அப்படியே எடிட் செய்யும்டி காட்டியதில் அதிசயித்து போனார்கள்.

பின்பு இதற்ககான தொகை எவ்வளவு என அவர்கள் கேட்க – நான் இதற்க்கு மொத்த தொகை தேவையில்லை ஒவ்வொரு பீஸ் மேனுஃபாக்சரிங் செய்யும் போது $ 1.75 ராயல்ட்டியும் மிச்ச நாடுகளில் எனக்கே மார்க்கெட்டிங் செய்யும் உரிமை தர வேண்டும் என்று கேட்டதை ஒத்து கொண்டு மைஸ்கேன் நாக்டெல் லாபில் இணைந்து இன்று – மலேஷியா – இந்தியா – ரஷியா – அமெரிக்க மற்றூம் கனடா நாடுகளில் விற்று கொண்டிருக்கிறது.

இந்த ஸ்கேன் சாதாரண மவுஸ் போல இருந்தாலும் இதில் 3டி சிமாஸ் ஸ்கேனர் மற்றூம் 1200 டிபிஐ லேசர் மற்றூம் இமேஜ் ஸ்டிச்சிங் டெக்னலாஜி இருப்பதால் குவாலிட்டி அபாரம். அது மட்டுமல்லாது எந்த ஒரு பொருளையும் ஸ்கேன் செய்யும் வகையில் அமைக்கபட்ட ஒரு அற்புத கேட்ஜெட். 198 மொழிகள் – நேரடி மொழி மாற்றம் – நேரடி இமேஜ் சர்ச் – மற்றூம் வோர்ட் / எக்ஸல் ஓசிஎர் என இன்னும் பல அம்சங்களை கொண்ட இந்த மைஸ்கேன் இன்று முதல் இந்தியாவில் கிடைக்கும். தமிழக டிஸ்ட்ரிபியூட்டர் – திரு வெற்றி சரவணன் – ஃப்ர்ஸ்ட் ஐடியா என்டர்பிரைஸஸ் அவர்களுக்கு கொடுத்துள்ளேன்.

அனைத்து மானிலங்களுக்கும் / சென்னைக்கும் /அனைத்து ஆன்லைன் சைட்டில் விற்கவும் டிஸ்ட்ரிபியூட்டர்கள் மற்றூம் டீலர்கள் தேவை. இந்தியா மட்டுமில்லாமல் மற்ற நாடுகளுக்கும் இதை விற்க பார்ட்னர்கள் தேவை. இத்ன் விரிவான வீடியோ விளக்க படம் இங்கே இருக்கின்றது…………….……https://www.youtube.com/watch?v=IL3Kj_4Irs8

இந்த ஜென் 3 வகை தான் இப்போ லான்ச் – ஜென் 4 மற்றும் ஜென் 5 இன்னும் வரும் மாதங்களில் லான்ச் செய்யப்படும். அனைத்து என்குயரிகளும் இந்த மின்னஞ்சல் வழியே – [email protected]

தமிழக வியாபாரத்துக்கு (சென்னையை தவிர) – இந்த முகவரியில் அணுகவும். [email protected]