October 22, 2021

மைக்ரோசாப்ட் புதிய சி ஈ ஓ-வான சத்யா நாதெல்லாவுக்கு சம்பளம் ஆண்டுக்கு ரூ.112 கோடி!

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பில்கேட்ஸ் மற்றும் ஸ்டீவ் பால்மரை அடுத்து 3வது தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்கும் பெருமையை பெற்ற இந்தியரான சத்யா நாதெல்லாவின் வருடாந்திர வருமானம் 1.2 மில்லியன் டாலர் (ஏறத்தாழ 7.5 கோடி) என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.அதேவேளையில், நிறுவன பங்குகள் மற்றும் போனஸ் என அனைத்தையும் கணக்கில் கொண்டால் அவரது வருடாந்திர வருமானம் 18 மில்லியன் டாலர் (ரூ.112 கோடி) ஆக இருக்கும். இந்தியாவின் ஐதராபாத் நகரை பூர்வீகமாக கொண்டவர் நாதெல்லா. புதிய பணி ஒப்பந்தத்தின்படி இவருக்கு மாதம் இரு முறை என சம்பளம் பிரித்து வழங்கப்படும்.
microsoft Satya-Nadellamsft
கடந்த 22 வருடங்களாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கு தற்போது 46 வயதாகிறது. போனஸ் தொகையானது பூஜ்யம் முதல் 300 சதவீதம் வரை வழங்கப்படும். இதனால் கிடைக்கும் தொகை 3.6 மில்லியன் டாலர். மேலும், நிறுவன பங்கு தொகையாக 13.2 மில்லியன் டாலர் அவருக்கு வழங்கப்படும்.இவை இரண்டும் சேர்த்து அவரது வருடாந்திர மொத்த வருமானம் 18 மில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும். நாதெல்லாவின் வருடாந்திர வருமானம் ஆனது நிறுவனத்தின் ஈ.ஐ.பி.யின் கீழ் (அதிகாரிகளுக்கான ஊக்கத்தொகை திட்டம்) தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

அவருக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வழங்கப்பட்ட பணிவாய்ப்பு கடிதத்தில், வருடத்திற்கு அதிகாரிகளுக்கான ஊக்கத்தொகை திட்ட நிறுவன பங்குகள் மதிப்பில் 13.2 மில்லியன் அமெரிக்க டாலர் பெற தகுதியானவர் என குறிப்பிடப்பட்டு உள்ளது.உங்களது திறமையான நிர்வாகத்தை வாரியம் நிர்ணயிப்பதில் இருந்து உங்களது போனஸ் தொகையானது பூஜ்யத்தில் இருந்து 300 சதவீதமாக இருக்கும் என்றும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Microsoft Sets New CEO’s Pay at $1.2 Million
**************************************************************
Microsoft Corp. MSFT -0.36% set new Chief Executive Satya Nadella’s base salary at $1.2 million, more than 70% higher than the base pay received by his predecessor, Steve Ballmer.Microsoft named Mr. Nadella, a company veteran, to the role Tuesday, making him the third CEO since the Redmond, Wash., company was founded in 1975. Mr. Ballmer had disclosed his intention to step down in August.