September 25, 2021

மைக்ரோசாஃப்ட் வழங்கும் புதிய டேப்லட் ஐ-பேட் ’ஆபிஸ் சூட்’ !

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் புதியதாக ஆபிஸ் சூட் எனும் புதிய டேப்லட் ஐ-பேடை அறிமுகப் படுத்தியுள்ளது. ஆப்பிள் நிறுவனத்துக்குப் போட்டியாக பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டதாக இது வெளி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
microsoft ipad
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள இந்தியரான சத்யா நாதெள்ளா, முதல் முறையாக மீடியாக்களைச் சந்தித்து, தங்களின் புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்தினார். கலிஃபோர்னியா மாகாணம் சான்பிரான்ஸிஸ்கோவில் நடை பெற்ற பிரம்மாண்டமான அறிமுக விழாவில் இதன் சிறப்பம்சங்களை விளக்கினார் நாதெள்ளா.

முந்தைய தலைவர் ஸ்டீவ் பால்மர் இருந்தபோதே மைக்ரோ சாஃப்ட்டின் விண்டோஸை மையமாகக் கொண்ட பல்வேறு இயங்குதளங்களைக் கொண்ட ஐ-பேட் உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப் பட்டன. மைக்ரோசாஃப்ட் வழங்கும் இதேபோன்ற சிறப்பம்சங்களை போட்டி நிறுவனங்கள் குறைந்த விலையில் அளிப்பதையும் நாதெள்ளா உணர்ந்துள்ளார் என்றே வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும் மைக்ரோசாஃப்ட் இயங்குதளத்தில் செயல்படும்போது அதன் செயல்பாடு மேலோங்கும். இதனால் மைக்ரோசாப்ட் ஆபிஸ் மற்றும் பிசி ஆகியவற்றுக்கான சாஃப்ட்வேரை எந்த ஒரு நிறுவனமும் அளிக்க முடியும்.இருப்பினும் விண்டோஸ் இயங்கு தளத்தில் செயல்படும் ஐ-பேடில் பல்வேறு அப்ளிகேஷன்களைச் சிறப்பாக செயல்பட வைப்பதே புதிய சவாலாகும்.

அது சிறப்பாக செயல்படும்போது, வாடிக்கையாளர்களுக்கு அது மிகுந்த நிறைவை அளிக்கும் என்று கருதுவதாக நாதெள்ளா குறிப்பிட்டார். புதிய ஐ-பேட் உபயோகம் வாடிக்கையாளர் களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று நம்புவதாக அவர் மேலும் கூறினார்.