September 27, 2021

மேக் இன் இந்தியா சிங்கம் சுவிஸ் வங்கி விளம்பரத்தின் காப்பியா?

பிரதமர் நரேந்திர மோடியின் மேக் இன் இந்தியா திட்டம் என்பது சிங்க நடைக்கு ஒப்பாகும். நமது ஒவ்வொரு அடியும் சிங்கத்தின் நடை போன்று இருக்க வேண்டும் என்ற பிரதமரின் அறிவிப்புடன் வெளியான இலச்சினையாக(Logo) உள்ள சிங்கத்தை சுவிஸ் வங்கியின் விளம்பரத்தைப் பார்த்து காப்பி அடித்து உருவாக்கவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
lion ad
சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் உள்ள கண்டோனல் வங்கியின் விளம்பரத்தில் சிங்கம் ஒன்று வரும், ’மேக் இன் இந்தியா’ விளம்பரத்தில் உடல் முழுவதும் இரும்பு பல்சக்கரங்களுடன் தோற்றமளிக்கும் சிங்கத்தைப் போலவே, அந்த விளம்பரத்தில் வரும் சிங்கமும் இருப்பதைக் கண்ட செய்தி இணையதளம் ஒன்று இது குறித்து செய்தி வெளியிட, அது சமூக வலைதளங்களிலும் தீயாகப் பரவ, மேக் இன் இந்தியாவின் இலச்சினை சுவிட்சர்லாந்திலிருந்து சுடப்பட்டது, காப்பியடிக்கப்பட்டது என்று ஏகத்தும் கமெண்ட்ஸ் குவிந்தது.

இந்நிலையில், இந்தக் கிண்டல்களைப் பார்த்துக் கலக்கமடைந்த மத்திய தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை செயலாளர் அமிதாப், மேக் இன் இந்தியாவின் லோகோவில் உள்ள 30 சிங்கங்களின் படங்களையும் சரமாரியாக ட்விட்டரில் பதிவேற்றி துடிப்பும் கம்பீரமும் கொண்ட இந்த சிங்கங்களில் ஒன்று கூட மந்தமான சலிப்பான சுவிஸ் சிங்களிப் போல் இல்லை என்று ட்வீட் செய்துள்ளார்.