September 18, 2021

மெள்ள ஆரம்பிக்கிறது ஐ டி இன்டஸ்ட்ரி வீழ்ச்சி – விழித்து கொள்ளாத இளம் தலைமுறை!

ஒரு புறம் 25,000 ஐடி ஊழியர்களுக்கு வேலை பறிக்கபட்ட சம்பவம் – இன்னொரு ஐடி கம்பெனி திறம்பட உழைத்தவர்களுக்கு 65 ஆயிரம் மதிப்புள்ள ஐ ஃபோன் 6 கொடுக்கிறது – இன்னொரு ஐடி ஜாம்பவான் மெர்ஸிடிஸ் பென்ஸ் அல்லது விலை உயர்ந்த 5 நட்சத்திர விடுமுறை……………………….
ravi jan 15
இந்தியாவின் நெ 1 மென் பொருள் ஏற்றுமதியாளரான டாடா கன்ஸல்டன்சி செர்விஸஸ் ஒவ்வொரு வருடமும் 1300 கோடி டாலர்களை வெளி நாட்டில் இருந்து கொணரும் இந்த கம்பெனியில் 3,13,000 பேருக்கு மேல் வேலை செய்யும் இந்த நிறுவனத்தில் அரசாங்கம் கூட தராத 33% பெண்களுக்கு தரும் ஒரே நிறுவனம் – டிசம்பர் மாதம் 30 ஆயிரம் வரை கம்பெனியில் ஆட்குறைப்பு என குண்டை தூக்கி போட்ட காரணம் – திறன் குறைந்த ஊழியர்களால் மிகுந்த நஷ்டத்துக்கு கம்பெனி சென்று லாப விகிதம் குறையும் காரணம் என்று – ரீஸ்ட்ரக்ச்சரிங் பிராஸாஸை துவங்கி பல பேரை டெர்மினேட் செய்தது, செய்கிறது, செய்ய போகிறது. இதன் உண்மை நிலையைத்தான் நாம் அறியப்போகிறோம்,,,,,,,,,,,,,

தெருக்கு தெருக்கு டாஸ்மாக் போல் எங்கு நிறைந்த பொறியியல் கல்லூரிகளின் கைவண்ணம் தான் இதற்க்கு முக்கிய காரணம். இவவ்வகை கல்லூரிகளில் படிக்கும் பலருக்கு அவர் பெற்றோர் காலத்தில் பள்ளிக்கூடத்தில் படித்த ஒரு சூத்திரம் கூட தெரியாமல் எஞ்சினியர் ஆனது இன்னொரு கொடுமை …………இவர்களின் கடைசி ஆண்டு கேம்பஸ் தேர்வு நடத்தி அங்கு விளைந்த அரை குறை உருளைக்கிழங்கான நம்ம எஞ்சினியர்களை தரம் வாரியாக பிரிக்காமல் சைஸ் வாரியாக பிரித்து மூட்டை மூட்டையாய் ஐடி கேம்பஸுக்கு கொண்டு போய் கொட்டிய உடன் – மர பெஞ்சு – வேகாத சோறு – வெளக்கமாறு வார்டன் – வெங்காய புரஃபஸர் இவர்களையே பார்த்து பார்த்து பழகிய பல பேருக்கு – முன்னாள் பீ காட்டில் எழுப்பிய வான் உயர்ந்த கட்டிடங்கள் – வழு வழு தரைகள் – வரை காப்பி – வயர்லெஸ் இன்டர் நெட் – வட்டியில்லா பெரும் சம்பளம் – வாசல் வரை கார் பிக்கப் டிராப்புக்கு – வசதி வாழ்க்கை என விட்டில் பூச்சிகளாய் போய் இவர்கள் தொலைப்பது இளமையை மட்டும் அல்ல – வாழ்க்கையே தான்.

எந்த ஒரு விவசாயி செத்தானா எனக்கென்ன / எந்த ஒரு போராளி செத்தா எனக்கென்னா – ஆஃப் ஷோர் / ஆன் சைட் / ஆஃப் சைட்டில் காரி காரி துப்பும் ஆங்கில கஸ்மாலங்களை 24 மணி நேரமும் உள் வாங்கி கொண்டு ஸ்மார்ட் ஃபோனு / ஸ்ம்சா வோ அம்சாவோட பீர் / செகனேன்ட்லாயவது ஒரு கார் இப்படி ஒவர் நைட்ல புதுப்பணக்காரன் ஆவது ஐடி ஜெனரேஷன் மட்டுமே………….ஆரம்பத்தில் அமர்க்களமாகவே தெரியபட்ட இவர்களின் வாழ்க்கை எண்ணி 3 மாதத்தில் உடம்பில் உள்ள பயாலஜி கிளாக் மாறி எப்ப தூங்கணும் எப்ப சாப்பிடணும் எப்ப உழைக்கனும்னு தெரியாம ஒவ்வொரு ஐடி கம்பெனி அனுப்பும் பால் வண்டிகளில் பிச்சுவா பக்கிரிகணக்கா பின்னாடி உட்கார்ந்தே தேமேனு முழிச்சுகிட்டு அல்லது தன்னையும் அறியாமல் ஜொல் வழிய தூங்கி கொண்டே ஷேர் அட்டோவோடு கேவலமாய் நசுங்கி கொண்டு செல்லும் இவர்களை பார்க்கும் போது வெள்ளைக்காரன் நம் நாட்டில் இன்னமும் அடிமையாய் வைக்க என்ன்வெல்லாம் புது டெக்னாலஜி கண்டுப்பிடித்திருக்கிறான் என்று ரோட்டில் குப்பை அள்ளுபவன் முதல் கோயம்பேட்டில் மூட்டை தூக்குபவர் வரை எண்ண தவறுவதில்லை.

ஐடி ஐடி ஐடி என்று பட்டி தொட்டி முதல் பாரின் சரக்கு விற்க்கும் ப்ரீமியர் டாஸ்மாக் வரை கோலொச்சிய ஐடி இப்போது தான் முதல் நோயை கண்டிருக்கிறது. அதுவும் அல்ப வயசில் (30 – 32) என்ற வயது போய் சேரும் வயசே இல்லை – ஆயினும் இவர்களின் நிலை என்னவோ ரேஸ் குதிரை போன்று தான் – சப்பானி ஆன குதிரை மட்டும் தான் அடிமாட்டு கம்மாடிட்டி இல்லை சற்றே வேகம் குறைந்த குதிரைக்கு கூட இறக்கும் தேதி குறிக்கப்ப்டும் அதே ஃபார்முலா தான் இங்கேயும்…………..

.33 – 35 வயதில் வெளி வரும் இவர்களுக்கு அரசு உத்யோகமும் கிடைக்காது – அப்பா நீ ரிட்டையர் ஆகும் போது 40 வர்ஷ எக்ஸ்பிரியன்ஸ்ல‌ வாங்கின சம்பளத்தை முதல் மாதத்தில வாங்கினேன் பாருப்பா இனிமேயாவது புழைக்க தெரிஞ்சுக்கோப்பான்னு எகத்தாளம் செய்தவன் / ளின் நிலைமை என்ன வாக போகிறது இனிமேல்………….இது எதனால்? இதை உணர்ந்து இவர்கள் செய்யவேண்டியது என்ன? இதை எப்படி அவாய்ட் செய்யலாம் – ஐடி இல்லையேல் உலகம் இல்லை என்பது உண்மை ஆனால் இவர்களின் சர்வைவல் எப்படி செக்யூர் செய்ய வேண்டும் என்பதை விரைவில் பார்ப்போம்!

High Time to WAKE UP and look for alternatives – IT Companies LAYOFF on the Rise – ANALYSIS –

……………………..To be continued…..