September 18, 2021

மெல்போர்னில் நாய் ஜோடிக்கு நடைபெற்ற ஆடம்பர திருமணம்! வீடியோ

நம்மூரில் மழை வரவில்லை என்றாலோ, காதலர்களைக் கொச்சைப் படுத்த வேண்டும் என்றாலோ நாய்க்கும், கழுதைக்கும் அல்லது இரண்டு நாய்களுக்கு கல்யாணம் பண்ணி வைப்பது வாடிக்கையாகி விட்டது
dog may 18
ஆனால் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரின் அருகே உள்ள செயின்ட் கில்டா பகுதியில் வசிக்கும் ஒருவர் வீட்டு வளர்ப்பு நாய், அருகாமையில் உள்ள இன்னொரு பெண் நாயை சுமார் 7 ஆண்டுகளாக ‘டேட்டிங்’ செய்து வருவதை அறிந்த இருவீட்டாரும் நேற்று அந்த ஜோடிக்கு மெல்போர்ன் கடற்கரை அருகே உள்ள ஒரு ஆடம்பர விடுதியில் திருமணம் செய்துவைத்து மகிழ்ந்தனர்.

லட்சக்கணக்கான ரூபாய் செலவில் தைக்கப்பட்ட திருமண உடையுடன் சிகப்பு கம்பளத்தின்மீது கம்பீரமாக நடந்துவந்த மணமகன் ஜாஸ்பர், மணமகள் ஜாஸ்மினை ஊரறிய முத்தமிட்டு தனது மனைவியாக ஏற்றுக் கொண்ட இந்த விழாவில் சுமார் 60 வளர்ப்பு நாய்கள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் பங்கேற்றனர்.

மது விருந்து, கேக் வகைகள் மற்றும் நாய்களுக்கு பிடித்தமான எலும்புகளால் தயாரிக்கப்பட்ட சிறப்பு பலகாரங்களுடன் களைகட்டிய இந்த திருமண விழாவுக்கு வந்திருந்தவர்களில் சிலர் புதுமண ஜோடிகளுக்கு பரிசுப் பொருட்களையும் வழங்கி வாழ்த்தினார்கள்.

வீடியோ :